புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2022

புட்டின் போட்டுள்ள படு சீக்கிரெட்டான பயங்கரமான திட்டம்: பல நாடுகள் அச்சத்தில் உள்ளது: என்ன நடக்கப் போகிறது ?

www.pungudutivuswiss.com

கடந்த பல வருடங்களாக ரஷ்யாவை ஆண்டு வரும் விளா

டுமிர் புட்டின், ரஷ்யாவை எப்படி விரிவாக்குவது என்பது தொடர்பாக மிக மிக ரகசியமாக செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே 5,000 மைல்களுக்கு அப்பால் அமெரிக்காவுக்கு அருகே உள்ள வெனிசுலா மற்றும் கியூபா ஆகிய நாடுகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அமெரிக்க ரஷ்ய போர் மூண்டால், அந்த 2 நாடுகளையும் ரஷ்யா தளமாக பாவிக்கும். இன் நிலையில் தனது அண்டை நாடுகளான ககாகிஸ்தான், டேக்மேனிஸ்தான், டொன் பாஸ் , கிரீமீயா, பெலருஸ் மற்றும் சிரியா என்று பல நாடுகளை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ரஷ்யா ஆயுதம் வழங்கவில்லை என்றால் இன் நாடுகள் கதி அதோ கதி தான். அதிலும் மிகப் பெரிய நாடான ககாகிஸ்தான் முழுக்க முழுக்க ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ளது. 1991ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்து பல துண்டு துண்டானது. இதில் இருந்து பல நாடுகள் உருவாகியது. இதற்கு காரணம் கொப்பர்- ஷவ் என்ற தலைவரே.  அன்றைய தினம் ரஷ்ய அதிபராக இருந்த கொப்பர் ஷவ்வை எப்படி அமெரிக்க சி.ஐ.ஏ கையில் போட்டது என்பது பெரும் கதை… அதனை இங்கே அழுத்தி வாசிக்கலாம்… இன் நிலையில்…

மீண்டும் ஒரு சோவியத் யூனியை உருவாக்குவதே புட்டினின் நிலைப்பாடாக உள்ளது. இதன் அங்கமாகவே யூக்கிரைன் நாட்டை கைப்பற்றி ரஷ்யாவோடு இணைக்க புட்டின் கடும் முயற்ச்சியில் இறங்கியுள்ளார். ஏற்கனவே கிரீமியா என்ற மாநிலத்தை அவர் ரஷ்யாவோடு இணைத்துள்ள நிலையில். யூக்கிரேன் நாட்டின் எல்லையில் உள்ள, சில மாநகர கவுன்சிலர்களை வைத்து, தீர்மானங்களை நிறைவேற்றி. ரஷ்யாவோடு இணைய சம்மதம் என்று கவுன்சில்களை அறிவிக்க வைத்து. பெரும் மாநகரங்களை கைப்பற்றுவதே புட்டின் திட்டம். அப்படி என்றால் ஐ.நா சபையால் எதனையும் செய்ய முடியாது அல்லவா. தற்போது 2,500 துருப்புகளை ககாகிஸ்தான் நாட்டுக்குள் அனுப்பியுள்ளது ரஷ்யா. இவர்கள் சிலவேளை ஊடுருவி, ஊக்கிரைன் நாட்டிற்குள் செல்லக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இப்படியான ஒரு கால கட்டத்தில்..

மீண்டும் ஒரு சோவியத் யூனியன் என்ற ஆபத்தான ஒரு கட்டமைப்பை கட்டியெழுப்ப புட்டின் முனைந்து வருகிறார். நாடுகளைப் பிடிக்க அவர் மேற்கொள்ளும் நகர்வுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருவதோடு. ஊக்கிரைன் நாட்டுக்கு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முழு அளவில் ராணுவ உதவிகளை வழங்கி ஊக்கிரைனை, சில வாரங்களில் பலம் மிக்க ஒரு நாடாக மாற்றியுள்ளார்கள். இனி புட்டின் எந்த நகர்வை மேற்கொள்ள உள்ளார் என்பது குறித்து உலகமே கூர்ந்து அவதானித்து வருகிறது.

ad

ad