புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2022

ஐபிஎல் 2022: தோனி அரைசதம் விளாசியும் சி.எஸ்.கே. சறுக்கியது ஏன்?

www.pungudutivuswiss.com
தோனி...தோனி.. என வான்கடே மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாகமாக ஆர்ப்பரித்தனர். பொறுப்புடன் விளையாடி 2 சீசன்களுக்குப் பிறகு ஐபிஎல்-ல் அரைசதத்தை பதிவு செய்திருக்கிறார் எம்.எஸ்.தோனி. இருந்தாலும் அவரது அரைசதம் ஜடேஜா தலைமையிலான சென்னை அணிக்கு பலன் தரவில்லை.

தொடக்கமே தடுமாற்றம்
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ஐ எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ். டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்ய ருத்துராஜ் கெய்க்வாட்டும், டெவென் கான்வேயும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரின் 3வது பந்திலேயே டக் அவுட்டானார் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட். உத்தப்பா கிடைத்த பந்துகளில் சிக்சரும் பவுண்டரியும் விளாச, மறுமுனையில் கான்வே சிங்கில்ஸ் ஆடினார். 8 பந்துகளில் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாறமளித்தார் கான்வே. அவரை தொடர்ந்து உத்தப்பா 28 ரன்களில் வருண் சக்கரவர்த்தியின் சூழலில் சிக்கினார்.

ஜடேஜாவின் தவறால் விடைபெற்ற ராயுடு

சரியான பார்ட்னர்ஷிப் கிடைக்காமல் தவித்த ராயுடு, ஜடேஜாவுடன் இணைந்து விளையாட முனைந்தார். ஆனால் ஜடேஜாவின் சிறிய தவறால் ராயுடு 15 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார். ஷிவம் துபே 3 ரன்களுடன் வெளியேறினர். 11 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 64 ரன்கள் மட்டுமே சேர்த்து கடுமையாக திணறியது. பின்னர் ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த எம்.எஸ்.தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

விளம்பரம்

முன்னாள் கேப்டனும் இன்னாள் கேப்டனும் ஜோடி சேர்ந்து 70 ரன்கள் குவித்தனர். 38 பந்துகளில் 1 சிக்சர், 7 பவுந்தரிகளுடன் தோனி அரைசதமும் ஜடேஜா 28 ரன்களும் எடுத்தும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி 3 ஓவர்களில் மட்டுமே இருவரும் இணைந்து 47 ரன்கள் விளாசினர். 2 சீசன்களுக்குப் பிறகு தோனி அரைசதம் விளாசியிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

மகேந்திர சிங் தோனி குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்
கொரோனா இரண்டாம் அலை: ஐபிஎல் தொடரிலிருந்து அடுத்தடுத்து விலகும் வீரர்கள் சொல்வது என்ன?
ஐபிஎல் 2021 போட்டிகளிலிருந்து பிரேக் எடுக்கும் அஸ்வின் - என்ன ஆச்சு?
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு சென்னை அணி 131 ரன்கள் எடுத்தது. ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ருத்துராஜ் - கான்வே ஆகியோரின் தடுமாற்றமும் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் போனதுமே சென்னை அணி குறைந்த ரன்களை எடுக்க முக்கிய காரணியாக அமைந்தது. கொல்கத்தா தரப்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்களும் வருண் சக்கரவர்த்தி, ரசல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்

ஜடேஜா
பட மூலாதாரம்,BCCI/IPL
மலிங்காவின் சாதனையை சமன் செய்த பிராவோ

132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மூத்த வீரர் ரஹானே 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

வெங்கடேஷ் 16 ரன்களிலும் அவரை தொடர்ந்து விளையாடிய நிதிஷ் ராணா 21, சாம் பில்லிங்ஸ் 25 என கணிசமான ரன்களுடன் பிராவோ பந்துவீச்சில் விடைபெற்றனர். கொல்கத்தாவின் 3 விக்கெட்களை கைப்பறியதன் மூலம் மொத்தம் 170 விக்கெட்களுடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் மலிங்காவின் சாதனையை சமன் செய்திருக்கிறார் பிராவோ.

முக்கியமான விக்கெட்களை பிராவோ வீழ்த்தியிருந்தாலும் கொல்கத்தாவின் வெற்றியை சி.எஸ்.கேவால் தடுக்க முடியவில்லை. 18வது ஓவரின் 3வது பந்தில் கேப்டன் ஷ்ரேயாஸின் பவுண்டரியுடன் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை ருசித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

தோனி
பட மூலாதாரம்,BCCI/IPL
"தோனி என் இன்ஸ்பிரேஷன்"போட்டி முடிந்ததும் பேசிய சென்னை அணி கேப்டன் ஜடேஜா, "டாஸ் வென்றால் முதலில் பந்துவீசியிருப்போம். முதல் ஆறு ஓவர்கள் ஆடுகளம் ஈரமாக இருந்தது. பேட்டிங்கில் எங்களுக்கு பெரியளவில் பார்ட்னர்ஷிப் அமையவில்லை.

அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம். தோனி எப்போதும் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்து வருபவர். அவர் என்ன செய்தாலும் நான் அவரைப் பின்பற்றுவேன்" என தெரிவித்தார்.

"தோனி ஆடினால் பதற்றமாக இருக்கும்""தோனி பேட்டிங் ஆட வரும்போதெல்லாம் எங்களுக்கு பதற்றமாகவே இருக்கும். அதுவும் குறிப்பாக கடைசி 3 ஓவர்கள் அவர்களுக்கு சாதகமாக அமைந்தது. உமேஷ் யாதவ் வலைப்பயிற்சியில் கடுமையாக உழைத்துள்ளார்.

பயிற்சி ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்டார்" என்றார் கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ். 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றிய கொல்கத்தா வீரர் உமேஷ் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ad

ad