புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2022

புலம்பெயர்ந்த இலங்கையர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள தயாராகும் கோட்டாபய?

www.pungudutivuswiss.com
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரத்திற்கான துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நியுலாண்ட் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பை வெள்ளிக்கிழமை சந்திக்கவுள்ளமை உட்பட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதி துணை இராஜாங்க செயலாளருக்கு தெளிவுபடுத்தினார்.
இந்த சந்திப்பின்போது அமெரிக்கா கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கையர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தை துணை இராஜாங்க செயலாளர் வலியுறுத்தினார்.
புலம்பெயர்ந்த சமூகத்தினருடன்பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தான் தயாராக உள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி வடமாகாண அபிவிருத்தியில் முதலீடு செய்ய அவர்களை அழைப்பதாக தெரிவித்தார்.
அமெரிக்காவின் பசுமை தொழில்நுட்பத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த துணை இராஜாங்க செயலாளர் சைபர் மற்றும் தகவல்தொழில்நுட்ப துறைகளில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டின் கல்வி வசதிகள் குறித்து கவனம் செலுத்திய அவர் கல்விதுறையில் தனியார் துறையினரின் பங்களிப்பு உயர் கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
உண்மையை கண்டறியும் பொறி;முறை மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் குறித்தும் விக்டோரியா நியுலாண்ட் வலியுறுத்தினார்.

ad

ad