புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2022

விசுவமடுவில் இருந்து கோட்டா கோ கம நோக்கி மிதிவண்டிப் பயணம்! Top News

www.pungudutivuswiss.com

காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள “கோட்டா கோ கம” நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து குடும்பஸ்தர், மிதி வண்டியில் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
அவர், தனது பயணத்தை விசுவமடு சந்தியில் இன்று காலை ஆரம்பித்தார்.

காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள “கோட்டா கோ கம” நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து குடும்பஸ்தர், மிதி வண்டியில் பயணத்தை ஆரம்பித்துள்ளார். அவர், தனது பயணத்தை விசுவமடு சந்தியில் இன்று காலை ஆரம்பித்தார்.

  

கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான இராசரத்தினம் ஜனகவர்மன் (வயது 32) என்பவரே பயணத்தை ஆரம்பித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும், பொருளாதார நெருக்கடி தொடர்பிலும் “கோட்டா கோ கம” போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மிதி வண்டியில் நான்கு நாட்கள் பயணித்து சென்றடைய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவருக்கு மக்களும் ஆதரவளித்து வருகின்றனர்.

ad

ad