புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2022

சஜித், அனுர கட்சிகள் சபையை புறக்கணிப்பு!

www.pungudutivuswiss.com



எதிர்க்கட்சிகளாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகியன நாடாளுமன்ற அமர்வை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

எதிர்க்கட்சிகளாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகியன நாடாளுமன்ற அமர்வை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன

மக்களுக்கு வாழமுடியா நிலைமையே நாட்டில் ஏற்பட்டுள்ளது. 225 பேரும் பொறுப்பு கூறவேண்டும். கள்வர்களே இந்த அரசாங்கத்துக்குள் இருக்கின்றனர் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அரசாங்கத்துக்கு தெரியவில்லை. ஆகையால், துன்பப்படும் மக்களுடன் நாங்கள் கைகோர்க்கின்றோம்.ஆகையால், இந்தவார சபை அமர்வை ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணிக்கிறது எனத் தெரிவித்து விட்டு சபையில் இருந்து வெளியேறினார்.

அதேவேளை, இந்த அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் இல்லை. மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆகையால், அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை வழங்கிவிட்டு, இவ்வாரம் சபை அமர்வை நாங்களும் புறக்கணிக்கின்றோம் என ஜே.வி.பியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் எம்.பியுமான அனுர குமார திஸாநாயக்க, பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

ad

ad