புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2022

22 இற்கு ஆதரவு இல்லை! - மொட்டு எம்.பிக்கள் போர்க்கொடி.

www.pungudutivuswiss.com


இன்றும் நாளையும்  பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் பலர், நேற்று  இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் பலர், நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான ஆளும் கட்சி எம்.பிக்கள் கூட்டம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

இதன்போது, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் எந்தவொரு திருத்தத்தையும் ஆதரிக்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராக வாக்களித்த தான், 22ஆவது திருத்தத்துக்கு எதிராகவும் வாக்களிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 22ஆவது திருத்தம் வேடிக்கையானது என்று தெரிவித்த கட்சியின் செயலாளர் சாகர காரியவசம், பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் பலர் அதற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக கூறினார்.

குழுவாக சேர்ந்து ஒரு தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில், எம்.பிக்களிடம் தெரிவித்துள்ளார்

ad

ad