புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 அக்., 2022

சுமந்திரனின் தனிப்பட்ட தீர்மானங்கள் தமிழ்த் தேசியத்தை வலுவிலக்கச் செய்கிறது - K.V.தவராசா

www.pungudutivuswiss.com

தமிழ் தேசியம் சாராதவர் தலைமை தாங்கினால் வெளியேறுவேன் - சுமந்திரனின் தனிப்பட்ட தீர்மானங்கள் தமிழ் தேசியத்தை வலுவிளக்கச் செய்கிறது. தமிழரசு கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவிப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத் தலைமைப் பதவிக்கு தமிழ் தேசியம் சாராத ஒருவர் வருவாராயின் தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவேன் என தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மத்திய குழு உறுப்பினருமான சட்டத்தரணி கே.தவராசா தெரிவித்தார்.
இன்று, ஞாயிற்றுக்கிழமை காலை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதை அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் தமிழ் கூட்டமைப்பில் இருக்கின்ற ஒருவரின் முடிவை தமிழ் கூட்டமைப்பின் முடிவாக ஏற்றுக் கொள்ள முடியாது.
நான் தமிழரசு கட்சியில் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக அங்கம் வகிக்கின்ற நிலையில் தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஆகியோரிடம் எவ் விதமான சலுகைகளையும் இதுவரை கேட்டதிலை.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நான் உதவி செய்துள்ளேன் எந்தவிதமான சலுகைகளையும் பதவிகளையோ கேட்டுப் பெற்றுக் கொண்டதில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முடிவுகளை எடுக்கும்போது கூட்டு பொறுப்பு காணப்படுவதில்லை மாறாக ஒருவர் முடிவெடுத்து விட்டு அதனைச் செய்யும்படி கூறுவது தான்தோன்றித்தனமான செயலாகும்.

ad

ad