புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 நவ., 2022

அரசுக்கு எதிராக கொழும்பில் பாரிய பேரணி! - தடுத்ததால் பதற்றம்

www.pungudutivuswiss.com

சுமார் 150 தொழிற்சங்கங்களும், 12 பிரதான எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கொழும்பில் இன்று பாரிய எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தி வருகின்றனர். இன்று மாலை 3 மணியளவில் மருதானையில் இந்தப் பேரணி ஆரம்பமானது. பெருமளவு மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரியும் இந்தப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.

மருதானையில் ஆரம்பமான அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம், டெக்னிக்கல் சந்தியின் ஊடாக கோட்டையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது. இதனால், அந்தப் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் காணப்படுகின்றது.

சந்தைக்கு அண்மையில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தால் மருதானை, புறக்கோட்டை பகுதியில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் புறக்கோட்டை வீதியை பொலிஸார் வழிமறித்துள்ளனர். பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் கலகமடக்கும் பொலிஸாரும் களத்தில் குவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆயுதமேந்திய ​இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad