புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2022

மேலும் சிலருக்கு அமைச்சர் பதவிகள்!

www.pungudutivuswiss.com


2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்துக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் சில அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்துக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் சில அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன

அரசியலமைப்பின் பிரகாரம் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆக அதிகரிக்க முடியும். இதற்கமைய ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது கட்சிக்கு மேலும் சில அமைச்சுப் பதவிகளை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்கள் பவித்ரா வன்னியாராச்சி, சி.பி. ரத்நாயக்க மற்றும் எஸ்.எம். சந்திரசேன ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானும் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

ad

ad