புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2022

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13
மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம்
ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளர் ப.மயூரனால் சபையில் புதன்கிழமை 
சமர்ப்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளர் ப.மயூரனால் சபையில் புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.

    

இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் 3 உறுப்பினர்கள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 3 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 4 உறுப்பினர்கள், சுயேச்சை குழுவின் 2 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலா ஒரு உறுப்பினர் என 15 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அதே வேளை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 2 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில், இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் 6 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் 5 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் 4 உறுப்பினர்களும், சுயேட்சை குழு சார்பில் 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் தலா ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad