புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2022

சொத்துக்களை விற்றும் குறைவாக உண்ணும் மக்கள்!

www.pungudutivuswiss.com
இலங்கையில் மக்கள்  தங்கள் சொத்துக்களை விற்றும் குறைவாக உணவுண்ணும் நிலை காணப்படுவதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் மக்கள் தங்கள் சொத்துக்களை விற்றும் குறைவாக உணவுண்ணும் நிலை காணப்படுவதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது

இலங்கை மத்திய வங்கியின் வரலாற்றில் மிகமோசமான நாணய வீழ்ச்சி காரணமாக வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ள இலங்கையர்கள் வாழ்க்கை நல்லவிதத்தில் காணப்பட்ட காலத்தில் சேர்த்த சொத்துக்களை விற்க்கின்றனர் மிககுறைவாக உணவுண்கின்றனர் என உலக உணவுதிட்டம் தெரிவித்துள்ளது.

ஓக்டோபர் மாதம் குடும்பங்களின் உணவு பாதுகாப்பு நிலை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இந்த விபரங்கள் தெரியவந்துள்ளன .

பத்தில் மூன்று குடும்பங்கள் உணவுப்பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்டன என உலகஉணவு திட்டம் தெரிவித்துள்ளது. பத்தில் ஏழு குடும்பங்கள் மிகவும் குறைவாக விரும்பப்படும் உணவை உண்ணுதல்போன்ற உணவு தொடர்பான மூலோபாயங்களை பின்பற்றுகின்றன ஜூன் மாதம் முதல் இந்த போக்கை அவதானிக்க முடிகின்றது என டிசம்பரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக உணவுதிட்டம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பத்தில் எட்டு குடும்பங்கள் பெருமதியான சொத்துக்களை விற்பது போன்ற வாழ்வாதாரத்தை சமாளிப்பதற்கான மூலோபாயங்களில் ஈடுபடுகின்றன ஜூன் மாதத்திற்கு பின்னர் இதுவே அதிகம் எனவும் உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நெருக்கடி ஆரம்பமான பின்னர் 1.1மில்லியன் நிவாரணத்தை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள உலக உணவு திட்டம் 556229 பாடசாலை மாணவர்கள் அரிசியில் தயாரிக்கப்பட்ட தான் ஆதரவளித்த மதிய உணவை பெற்றுக்கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

ad

ad