புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2023

பிரான்ஸ் கார் து நோட் தொடருந்து நிலையத்தில் கத்திக்குத்து: 6 பேர் காயம்: தாக்குதலாளி சுட்டுக்கொலை

www.pungudutivuswiss.com
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கார் டு நொர்ட் தொடருந்து நிலையம் உள்ளது.
 இது பிரான்சின் மிகவும் பரபரப்பான தொடருந்து நிலையம் ஆகும். 
இந்நிலையில், இந்த தொடருந்து நிலையத்தில் இன்று காலை 6.45 மணியளவில் 
தாக்குதலால் அதிர்ச்சியடைந்த பயணிகள் தொடருநு்து நிலையத்தில் இருந்து அலறியடித்து ஓடினர். 

இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் நடத்தியது யார்? தாக்குதலில் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினா விசாரணை நடத்தி வருகின்றனர்.

ad

ad