புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2023

வந்த வேலையை முடித்து விட்டார் சுமந்திரன்! - தவராசா சீற்றம்

www.pungudutivuswiss.com



பாராளுமன்ற உறுப்பினர்  சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் எதற்கு வந்தாரோ அதை சரியான முறையில் செய்து முடித்திருக்கிறார் என தமிழரசு கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி. தவராசா தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் எதற்கு வந்தாரோ அதை சரியான முறையில் செய்து முடித்திருக்கிறார் என தமிழரசு கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி. தவராசா தெரிவித்தார்

திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்துவதற்கு யார் காரணம் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் ஒரே நிலைப்பாட்டில் உள்ள ஏனைய தமிழ் கட்சிகளையும் இணைத்துப் பயணிக்க வேண்டும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வந்துள்ளேன்.

ஆனால் அதிகாரம் பதவி ஆசை காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்தவர்கள் கூட்டமைப்புப் பிளவுக்குக் காரணமாக இருந்துள்ளார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ் கூட்டமைப்புக்குள் இருக்கும் ஆமை சுமந்திரன் என பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் பேசினார்.

அவரது கருத்துத் தொடர்பில் தமிழ் மக்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒன்றாக இருந்தவர்கள் தொடர்பில் பெயர் குறிப்பிடாமல் தூள் வியாபாரிகள் காட்டிக் கொடுப்பவர்கள் என விமர்சனம் செய்துள்ளார்.

செல்வம் அடைக்கலநாதன் கூட்டமைப்பு போல் இருக்கும் ஆமை சுமந்திரன் என வெளிப்படையாக பேசினார் அதேபோன்று துணிவிருந்தால் சுமந்திரன் பெயர்களை குறிப்பிட்டு பேசியிருக்க வேண்டும்.

ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றால் ஒரு கட்சியை குறிப்பிடுவது அல்ல ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் இணைந்து இருப்பதே கூட்டமைப்பு என அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad