புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2023

திருகோணமலை உள்ளூராட்சி சபைகளின் வேட்புமனுக்களில் சறுக்கிய தமிழ்க் கட்சிகள்!

www.pungudutivuswiss.com


2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூர் அதிகாரசபைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 22 வும் சுயேட்சைக்குழுக்கள் 16வம் 178 வேட்புமனுக்களுக்கான கட்டுப்பணங்களை செலுத்தியதாகவும் இவற்றுள் 162 வேட்புமனுக்கள் தாக்கல் செலுத்தப்பட்டதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளரும் மாவட்ட உள்ளூர் அதிகார சபைகளுக்கான தெரிவத்தாட்சி அலுவலருமான ஆர். சசீலன் தெரிவித்தார்.

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூர் அதிகாரசபைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 22 வும் சுயேட்சைக்குழுக்கள் 16வம் 178 வேட்புமனுக்களுக்கான கட்டுப்பணங்களை செலுத்தியதாகவும் இவற்றுள் 162 வேட்புமனுக்கள் தாக்கல் செலுத்தப்பட்டதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளரும் மாவட்ட உள்ளூர் அதிகார சபைகளுக்கான தெரிவத்தாட்சி அலுவலருமான ஆர். சசீலன் தெரிவித்தார்

தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களுள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஏழு மற்றும் சுயேட்சை குழுவொன்றின் வேட்புமனுக்கள் உள்ளடங்களாக 08 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாநகர சபைக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 15, சுயேட்சை குழுக்கள் 04 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன. இவற்றுள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பு மனு உரிய பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை இன்மையாலும் ரூபராஜ் ஜனோஜ் தலைமையிலான சுயேட்சைக்குழுவின் வேட்புமனு உரிய நேரத்திற்கு சமர்ப்பிக்காமை காரணமாகவும் நிராகரிக்கப்பட்டன.

மேலும் தமிழர் விடுதலை கூட்டணி வேட்பாளர் மிஹ்ராப் இவாத் அகமட்டின் வேட்பாளர் அந்தஸ்த்து சத்தியப்பிரமான உறுதியுரை இன்மையாலும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வேட்பாளர்களான நேசதுரை சங்கிர்த்தா , ஜெகநாதன் நவதீசன் ஆகியோர் பூரணமற்ற சத்தியப்பிரமாண உறுதியுரையை வழங்கியமையாலும் அவர்களின் வேட்பாளர் அந்தஸ்த்தும் நிராகரிக்கப்பட்டன. இதன்படி திருகோணமலை மாநகர சபைக்கு மொத்தமாக 473 வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.

கிண்ணியா நகர சபைக்காக 13 அரசியல் கட்சிகள் மாத்திரம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தன. இவற்றுள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தாக்கல் செய்த வேட்புமனு உரிய பெண் வேட்பாளர் இன்மை காரணமாக நிராகரிக்கப்பட்டது. இங்கு போட்டியிடும் மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 192 ஆகும்.

வெருகல் பிரதேச சபைக்காக 13 அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களை சமர்ப்பித்தன. இச்சபைக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர் அப்துல்லா அஸீராவின் வேட்பாளர் அந்தஸ்த்து சத்தியப்பிரமாண உறுதியுரை இன்மை காரணமாக நிராகரிக்கப்பட்டது. இங்கு 207 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

சேருவல பிரதேச சபைக்கு 10 அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன. இதில் இலங்கை தமிழரசுக்கட்சி தாக்கல் செய்த வேட்புமனு உரிய பெண் வேட்பாளர் இன்மை காரணமாக நிராகரிக்கப்பட்டன. இங்கு 171 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கந்தளாய் பிரதேச சபைக்கு 13 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதனுள் இரண்டு சுயேட்சைக் குழுக்களும் உள்ளடங்கும்.இச்சபைக்காக வேட்புமனு தாக்கல் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வேட்புமனு உரிய பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை இன்மை காரணமாகவும் சுதந்திர ஐக்கிய முன்னணியின் வேட்புமனு வேட்பாளர்களின் எண்ணிக்கை பூரணப்படுத்தப்படாமை காரணமாகவும் நிராகரிக்கப்பட்டன. இச்சபைக்கு 264 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மொரவெவ பிரதேச சபைக்கு 07 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இங்கு மொத்தம் 133 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கோமரங்கடவெல பிரதேச சபைக்கு 05 அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்களும் பதவிசிறீபுர பிரதேச சபைக்கு 07 அரசியல் கட்சிகளும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தன. இங்கு போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை முறையே 95, 133 ஆகும்.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கு 16 அரசியல் கட்சிகளும் 05 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன. இவற்றுள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்புமனுவில் கட்சியின் பெயர் இடத்தில் குறிப்பிடப்படாமை காரணமாக நிராகரிக்கப்பட்டது. மேலும் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் காளிராசா ராஜு மற்றும் சங்கித்தா மோகனதாசின் வேட்பாளர் அந்தஸ்த்து பூரணமற்ற சத்தியப்பிரமானம் காரணமாக நிராகரிக்கப்பட்டது. இச்சபைக்காக 418 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

குச்சவெளி பிரதேச சபைக்காக 16 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இதில் இரண்டு சுயேட்சை குழுக்களும் அடங்கும். அகில இலங்கா தமிழ் காங்கிரசின் வேட்புமனு உரிய எண்ணிக்கையான வேட்பாளர் இன்மை காரணமாக நிராகரிக்கப்பட்டது. இங்கு போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 285 ஆகும்.

தம்பலகாமம் பிரதேச சபைக்காக 11 வேட்புமனுக்கள் அரசியல் கட்சிகளால் தாக்கல் செய்யப்பட்டன. இங்கு மொத்தம் 209 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

மூதூர் பிரதேச சபைக்கு 15 அரசியல் கட்சிகளும் 03சுயேட்சை குழுக்களும் உள்ளடங்கலாக 18 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இங்கு போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 456 ஆகும்.

கிண்ணியா பிரதேச சபைக்கு 09 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இச்சபைக்கு வேட்புமனு தாக்கல் செய்த ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் அன்சார் இஜாஸ் பூரணமற்ற சத்தியப்பிரமாணம் காரணமாக வேட்பாளர் பட்டியலில் அவரின் பெயர் நிராகரிக்கப்பட்டது. இங்கு போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 143ஆகும்.

13 உள்ளூராட்சி சபைகளுக்குமாக 3179 வேட்பாளர்கள் மொத்தமாக போட்டியிடுகின்றனர்.

ad

ad