புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2023

தொடர்ந்தும் சர்ச்சையில் சிக்கும் ரொனால்டோ! கோபத்தை வெளிப்படுத்தும் மக்கள்

www.pungudutivuswiss.com
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ
 ரொனால்டோ, சவுதி அரேபியாவின் அல்-நாசர் கிளப்பிற்காக விளையாட உள்ளார்.

எனினும் இதுவரை சவுதி கிளப் அணிக்காக அவரால் எந்த போட்டியிலும் விளையாட முடியவில்லை.

ஆனால் அவரது சொந்த வாழ்க்கை சவுதி அரேபியாவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இஸ்லாமிய ஷரியா சட்டம்
ஏனெனில் ரொனால்டோ தனது காதலி ஜார்ஜினாவுடன் சவுதி அரேபியாவில் ஆடம்பரமான வீட்டில் வசித்து வருகிறார். சவுதிஅரேபியாவில் நடைமுறையில் உள்ள இஸ்லாமிய ஷரியா சட்டத்தில் இதற்கு அனுமதி இல்லை.

சவுதி அரேபியாவில் திருமணமாகாத தம்பதிகள் உடலுறவு கொள்வது அல்லது ஒன்றாக வாழ்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு கடுமையான தண்டனை வழங்கவும் விதிமுறை உள்ளது.

தொடர்ந்தும் சர்ச்சையில் சிக்கும் ரொனால்டோ! கோபத்தை வெளிப்படுத்தும் மக்கள் | Cristiano Ronaldo 2030 World Cup Bid Saudi Arabia

இதுவரை சவுதி அரேபிய அதிகாரிகள், அல் நாசர் கால்பந்து கிளப் அல்லது ரொனால்டோ, இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

ரொனால்டோ சவுதி அரேபியாவிற்கு வந்தவுடன், அளிக்கப்பட்ட கிளப்பின் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் அவரது காதலி ஜார்ஜினா, ’அபாயா’(இஸ்லாமிய உடை) அணிந்து கலந்து கொண்டார்.

ரொனால்டோ சவுதி கிளப்பில் இணைந்தது அரபு நாடுகளின் கால்பந்து உலகில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. மறுபுறம் பார்வையாளர்கள், அதன் அரசியல் மற்றும் கலாச்சார தாக்கங்கள் பற்றியும் விவாதிக்கின்றனர்.

ரொனால்டோ தனது காதலி ஜார்ஜினாவுடன் சவுதி அரேபியாவில் வாழ்வதற்கு ’சலுகை’ வழங்கப்படலாம் என்று கால்பந்து உலகத்துடன் தொடர்புடையவர்கள் நம்புகிறார்கள்.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் விஷன் 2030க்கு இது ஒரு முக்கியமான நடவடிக்கை. சவுதி அரேபியா இதை 'ஸ்போர்ட் வாஷிங்' ஆகப் பயன்படுத்தி, நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களில் இருந்து கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சவுதி அரேபியாவில் ஷரியா சட்டத்தின் படி, திருமணமாகாத தம்பதிகள் ஒன்றாக வாழ்வதை அது தடை செய்கிறது. வழக்கமாக ஒரு ஆணும் பெண்ணும் ஒரு ஹோட்டலில் தங்கும் போதோ அல்லது வீட்டு உரிமையாளர் தங்கள் வீட்டை யாருக்காவது வாடகைக்கு விடும்போதோ, அவர்களிடம் ஆவணச்சான்று கேட்கப்படும்.

அது பின்னர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும். இந்த சட்டத்தை மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் வெளிநாட்டினர் விஷயத்தில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கடந்த பல ஆண்டுகளாக மென்மை போக்கு நிலவுகிறது.

2019 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவின் விசா கொள்கை தளர்த்தப்பட்டது. அதன்படி திருமணமாகாத வெளிநாட்டு தம்பதிகளும் ஹோட்டல் அறைகளை எடுக்க முடியும். அதே நேரத்தில் பெண்களும் ஹோட்டல் அறைகளில் தங்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால் அவர்கள் தனியாக இருக்க வேண்டும். இதற்கு முன் தம்பதி அறையைப் பெறுவதற்கு திருமணச் சான்றை அளிக்க வேண்டும். ஆனால் ரொனால்டோவும் ஜார்ஜினாவும் சவுதி அரேபியாவில் நீண்ட காலம் வாழ வேண்டியிருக்கும்.

தொடர்ந்தும் சர்ச்சையில் சிக்கும் ரொனால்டோ! கோபத்தை வெளிப்படுத்தும் மக்கள் | Cristiano Ronaldo 2030 World Cup Bid Saudi Arabia

சட்ட வல்லுநர்களின் கருத்து
எனவே அவர்கள் அங்கு தங்குவது விவாதப் பொருளாகவே உள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியா சட்டத்தை மாற்றாது என்றும் வெளிநாட்டினருக்கு காட்டப்படும் மென்மை போக்கு மட்டும் ரொனால்டோ, ஜார்ஜினா விவகாரத்திலும் செயல்படுத்தப்படும் என்றும் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரொனால்டோ ஒரு சிறந்த கால்பந்துவீரராக இருப்பது, சவுதி அரேபிய அரசின் நடவடிக்கையில் இருந்து அவரை காப்பாற்றக்கூடும் என்று இரண்டு சவுதி அரேபிய வழக்கறிஞர்களை மேற்கோள் காட்டி ஸ்பானிஷ் செய்தி முகமை EFE தெரிவித்துள்ளது.

”திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது சட்டப்படி இப்போதும் குற்றமாகும். ஆனால் அரசு அமைப்புகள் இதையெல்லாம் இப்போது கண்டும் காணாமல் இருக்கத்தொடங்கியுள்ளன. அதற்காக யாரும் தண்டிக்கப்படுவதில்லை. ஆனால் ஏதேனும் குற்றச் செயல்கள் நடந்தால் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது,” என்று செய்தி முகமையிடம் பேசிய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ரொனால்டோ மற்றும் ஜார்ஜினாவின் உறவு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக நீடிக்கிறது. 2016 முதல் இருவரும் ஒன்றாக உள்ளனர். அப்போது ரொனால்டோ ஸ்பானிஷ் கால்பந்து கிளப்பான ரியால் மாட்ரிட்டில் விளையாடிக்கொண்டிருந்தார்.

ஜார்ஜினா மற்றும் ரொனால்டோவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆனால் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரொனால்டோவுக்கு சவுதி அரசு விலக்கு அளிக்கும் என்று பெரும்பாலான மக்கள் கருதும் அதே வேளையில், "சட்டமும் மதமும் ஏழைகளுக்கு மட்டுமே" என்பதை இது காட்டுகிறது என்று ஒரு டுவிட்டர் பயனர் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதே நேரம் இந்த விடயத்தில் சவுதி அதிகாரிகளின் சாத்தியமான சலுகையை சில பயனர்கள் வரவேற்றுள்ளனர். ரொனால்டோ இப்போது ஜார்ஜினாவை திருமணம் செய்து கொள்வாரா என்று அவர்கள் கேள்வியும் எழுப்பியுள்ளன

ad

ad