புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2023

மோதி பற்றிய பிபிசி ஆவணப்படத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம், பிரிட்டிஷ் பிரதமர் எதிர்வினை

www.pungudutivuswiss.com
மோதி ஆவணப்படம்

பட மூலாதாரம்,ANI

பிரதமர் நரேந்திர மோதி பற்றிய பிபிசி ஆவணப்படத்துக்கு இந்திய அரசு எதிர்வினையாற்றியுள்ளது. இதுபற்றி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அந்நாட்டுப் பிரதமர் ரிஷி சூனக் பதிலளித்துள்ளார்.

"இந்தியா: மோதி கேள்வி" என்னும் இரண்டு பகுதிகள் கொண்ட ஆவணப்படத்தை பிபிசி தயாரித்துள்ளது. முதல் பாகம் ஜனவரி 17 அன்று பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்டது. இரண்டாம் பாகம் ஜனவரி 24 அன்று ஒளிபரப்பப்படும். பிபிசியின் உள்நாட்டு சேனலான பிபிசி டூ- வில் ஒளிபரப்பாகின்றன.

பாரதிய ஜனதா கட்சியின் பதவிகளில் இருந்து உயர்ந்து குஜராத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டது வரையிலான நரேந்திர மோதி கடந்து வந்த அரசியலின் முதல் படிகளை இந்த ஆவணப்படத்தின் முதல் பகுதி விவரிக்கிறது.

செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றிய ஒரு கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "இது ஒரு குறிப்பிட்ட மதிப்பற்ற கதையை முன்வைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பிரச்சாரத்தின் பகுதி என்று நாங்கள் நினைக்கிறோம் என்பதை நான் தெளிவாகக் கூறுகிறேன். சாய்வு, நடுநிலை இல்லாமை மற்றும் தொடர்ச்சியான ஒரு  காலனியாதிக்க மனநிலை அப்பட்டமாகத் தெரிகிறது.  இந்தத் திரைப்படம் அல்லது ஆவணப்படம் இந்த கதையை மீண்டும் பரப்பிக் கொண்டிருக்கும் அமைப்பு மற்றும் தனிநபர்களின் ஒரு பிரதிபலிப்பு."

ஆவணப்படத்தை உருவாக்குவதற்கான பிபிசியின் நோக்கம் குறித்து பாக்சி கேள்வி எழுப்பினார். அவர் மேலும் கூறுகையில், "இதன் நோக்கம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள திட்டம் நம்மை சிந்திக்க வைக்கிறது."

மோதி ஆவணப்படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குறைந்தது 2000 பேர் கொல்லப்பட்ட வன்முறையின் போது குஜராத்தின் முதலமைச்சராக இருந்த மோதியின் நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பும் பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகத்திலிருந்து பிபிசிக்கு கிடைத்த, இதுவரை வெளியிடப்படாத அறிக்கையை இந்த ஆவணப்படம் முன்னிலைப்படுத்திக் காட்டுகிறது.

பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, 2002 ஆம் ஆண்டில் வன்முறை நிகழ்வதற்கு ஏதுவாக  "தண்டனை இல்லாத சூழல்" ஏற்பட மோடி "நேரடிப் பொறுப்பாக" இருந்தார் என்று கூறுகிறது.

வன்முறையில் தனக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்று தன்மீதான குற்றச்சாட்டுகளை மோதி நீண்ட காலமாக மறுத்து வருகிறார். ஆனால் பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகத்திற்கு அறிக்கையை எழுதிய பிரிட்டிஷ் தூதரக அதிகாரி பிபிசியிடம் பேசியபோது தனது அறிக்கையின் முடிவுகளை சரியெனக் கூறினார்..

குஜராத் வன்முறையில் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே மோதியை விடுவித்து விட்டது.

எங்கள் புலன்விசாரணையில் கண்டறியப்பட்டவை இப்போதும் நிதர்சனம். 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் தெளிவாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தொடர்நடவடிக்கையில் 2,000 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அது ஓர் உண்மை."

ரிஷி சூனக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிபிசி குறிப்பிடும் இந்த அறிக்கை, அப்போதைய வெளியுறவு அமைச்சர்  ஜாக் ஸ்ட்ராவால் உத்தரவிடப்பட்ட விசாரணையின் ஒரு பகுதியாகும். வன்முறையின் அளவு வெளியே தெரிந்ததைவிட அதிகமாக இருந்ததாகவும், கலவரத்தின் நோக்கம் இந்து பகுதிகளிலிருந்து முஸ்லிம்களை அகற்றுவதே என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

பிரிட்டிஷ் எம்பி இம்ரான் ஹுசைன் பிரிட்டன் பாராளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பினார். குஜராத் வன்முறைக்கு மோதி நேரடியாக பொறுப்பு என்று கூறும் வெளியுறவு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளின் கருத்துகளுடன் பிரதமர் ரிஷி சூனக்  உடன்படுகிறாரா என்றும், "இந்தக் கொடிய இனச் சுத்திகரிப்பு செயலில் அவர் ஈடுபட்டதைப் பற்றி வெளியுறவு அலுவலகத்திற்கு இன்னும் என்ன தெரியும்" என்றும் கேட்டார்.

எம்.பி. முன்வைத்த சித்தரிப்பில் உடன்படவில்லை என்று பிரதமர் ரிஷி சூனக் இதற்குப் பதில் அளித்தார்.

"பிரிட்டன் அரசின் நிலைப்பாடு தெளிவானது, நீண்டகாலமாக நீடித்திருப்பது. அது மாறவில்லை. எங்கும் துன்புறுத்தலை நாம் பொறுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால் மரியாதைக்குரியவர் விவரிக்கும் சித்தரிப்புடன் நான் முற்றிலுமாக உடன்படவில்லை.” என்று அவர் கூறினார்.

“உலகம் முழுவதிலும் உள்ள முக்கிய பிரச்னைகளை எடுத்துக்காட்டுவதற்கு பிபிசி உறுதிபூண்டிருக்கிறது. இந்த ஆவணப்படத் தொடர், இந்தியாவின் பெரும்பான்மையான இந்துக்களுக்கும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் இடையிலான பதற்றத்தை ஆய்வு செய்கிறது. அந்தப் பதற்றம் தொடர்பான இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதியின் அரசியலை ஆராய்கிறது.” என்று பிபிசி செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

“இந்த ஆவணப்படம் சிறந்த ஊடக நியதிகளுடன் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது. பலதரப்பட்ட குரல்கள், சாட்சிகள்,  நிபுணர்கள் ஆகியோரை அணுகினோம்.  பலவிதமான கருத்துக்களை இடம்பெறச் செய்திருக்கிறோம் - இதில் பாஜகவை சேர்ந்தவர்களின் பதில்களும் அடங்கும். இந்த ஆவணப்படத் தொடரில் எழுப்பப்பட்ட அம்சங்களுக்கு பதிலளிக்கும் உரிமையை இந்திய அரசுக்கு நாங்கள் வழங்கினோம் - இந்திய அரசு பதிலளிக்க மறுத்துவிட்டது.” என்று பிபிசி கூறியது.

முன்னாள் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரா கூறுகையில், "இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது, காவல்துறையை பின்வாங்கச் செய்வதிலும், இந்து தீவிரவாதிகளை மறைமுகமாக ஊக்குவிப்பதிலும் முதல்வர் மோதி ஒரு முன்வந்து செயல்படும் பங்கைக் கொண்டிருந்தார் என்பது மிகவும் தீவிரமான கூற்று. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காக காவல்துறையினர் தங்கள் வேலையைச் செய்வதைத் தடுப்பதற்கான அரசியல் தலையீட்டுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.” என்றார்.

அந்த நேரத்தில் பிரிட்டிஷ் அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்பதைப் பற்றி ஸ்ட்ரா கூறும்போது, “எங்களுக்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன, நாங்கள் இந்தியாவுடனான ராஜீய உறவுகளை ஒருபோதும் முறித்திக் கொண்டிருக்கப் போவதில்லை, ஆனால் இது அவரது (மோதியின்) நற்பெயருக்கு ஒரு கறையாக உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை."

ad

ad