புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2023

போராட்டத்தில் குதித்த 40 தொழிற்சங்கங்கள் - முக்கிய சேவைகள் முடங்கின! Top News

www.pungudutivuswiss.com
அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில்  இன்றைய தினம் பணிப் புறக்கணிப்பு, சுகயீன விடுமுறை, எதிர்ப்பு பேரணிகள் மற்றும் கறுப்பு உடையணிந்து கடமைக்கு சமூகமளித்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் பணிப் புறக்கணிப்பு, சுகயீன விடுமுறை, எதிர்ப்பு பேரணிகள் மற்றும் கறுப்பு உடையணிந்து கடமைக்கு சமூகமளித்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்

ஆசிரியர்கள், அதிபர்கள் கறுப்பு உடை அணிந்தும் மற்றும் கறுப்பு பட்டி அணிந்தும் பெரும்பாலான பாடசாலைகளுக்கு இன்று சமூகமளித்துள்ளனர்.

சம்பள அதிகரிப்பின் இரண்டாம் கட்டம் இந்த வருடம் வழங்கப்படாமை, நிலுவை சம்பளத்துக்கு வரி அறவிடல் உட்பட பல்வேறு காரணங்களை முன்வைத்து ஆசிரியர்கள், அதிபர்கள் இந்த கறுப்பு வார போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்திலும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். கிளிநொச்சியில் உள்ள அரச வங்கிகள் முழுமையாக பூட்டப்பட்டுள்ளதுடன், சேவைகள் எவையும் இடம்பெறவில்லை. இதனால் வங்கி சேவையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மின்சார சபையின் அலுவலகமும் பூட்டப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்கள் பணிக்கு செல்லாது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். , அவசர சேவைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மின் பொறியியலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று மட்டக்களப்பு நகரில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை வங்கி ஊழியர் சங்கம்,இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்,அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட சங்கங்கள் இணைந்து இன்று நண்பகல் மட்டக்களப்பு படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலளார்கள் நினைவுத்தூபி அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நியாயமான வரி திருத்தங்களை தோற்கடிக்க போராடுவோம் என்னும் தொனிப்பொருளிளல் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் அரசாங்கத்துக்கு எதிரான பல பதாகைகளுடன் அரசு முன்னெடுக்கப்படும் வரி கொள்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் நிறுத்தப்படாத பட்சத்தில் எதிர்வரும் எட்டாம் திகதியிலிருந்து தொடர் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.

இதன்போது இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் கறுப்பு உடையணிந்து கறுப்புக்கொடிகளை கைகளில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நியாயமற்ற வரிக்கொள்கை உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை 8.00 மணி தொடக்கம் 24 மணித்தியாலய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

நாடளவிய ரீதியில் வரி திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாழ்க்கைச் செலவினை குறைக்க வேண்டும் எனவும் கோரி துறைமுகம், ரயில்வே, பெட்ரோலியவளம், வங்கித்துறை உள்ளிடட 40 தொழிற்சங்களினால் எதிர்ப்பு போராட்டங்கள், பணிப்புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையிலேயே வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அவசர நோயாளர் பிரிவு, நோயாளர் விடுதி , விபத்துப்பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு உட்பட்ட சில சேவைகளில் மட்டுப்படுப்பட்ட வைத்தியர்கள் சேவைகள் ஈடுபடுவதுடன் வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் பிரிவு போன்ற ஏனைய சேவைகளிலிருந்து வைத்தியர்கள் முற்றாக 24மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக், வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றிக்கு வருகை நோயாளிகள் பல்வேறு அசோகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.


ad

ad