புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2023

ஒடுக்குமுறைகள், கண்காணிப்புக்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்!

www.pungudutivuswiss.com


இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமானது. இம்முறை கூட்டத்தொடரின் நிகழ்ச்சிநிரலில் இலங்கை தொடர்பில் விசேட விவாதங்கள் எவையும் உள்ளடக்கப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் பேரவையில் இலங்கை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உயர்ஸ்தானிகர் வொல்கர் டர்க்,

இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன்சுமை என்பன சமூக, பொருளாதார உரிமைகளை அனுபவிப்பதற்கான நாட்டுமக்களின் இயலுமையில் தீவிர மட்டுப்பாடுகளை ஏற்படுத்தியிருக்கின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை 'இந்நெருக்கடியிலிருந்து மீட்சியடைவதை இலக்காகக்கொண்ட கொள்கைகளில் சமத்துவமின்மை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படவேண்டும்.

அதேபோன்று சமூகப்பாதுகாப்பு மற்றும் ஏனைய பொருளாதாரக்கூறுகளையும் மேம்படுத்தும் வகையில் அவை அமையவேண்டும்' என்றும் வொல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆட்சிநிர்வாகத்தில் நிலவும் ஊழல்மோசடிகள், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதுடன் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு அக்கொள்கைகள் பங்களிப்புச்செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படுவதுடன் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மீதான ஒடுக்குமுறைகள், கண்காணிப்புக்கள் என்பன முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு 'நிலைமாறுகால நீதியை அடைந்துகொள்வதை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் செயற்திறன்மிக்க நடவடிக்கைகளுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு எமது அலுவலகம் தயாராக உள்ளது' என்றும் வொல்கர் டர்க் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad