புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2023

www.pungudutivuswiss.com



இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சனை தொடர்பாக கடந்த வருடம் கச்சதீவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது 2023 ஆம் ஆண்டு இதற்கு நிரந்தர தீர்வு கிடைத்து விடுமென தெரிவித்த கடற்தொழில் அமைச்சர் இந்த வருடமும் கச்சதீவில் பேச்சுவார்த்தை என்று கூறிக்கொண்டு செல்வதாக வடமராட்சி வடக்கு, கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் நா.வர்ணகுலசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சனை தொடர்பாக கடந்த வருடம் கச்சதீவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது 2023 ஆம் ஆண்டு இதற்கு நிரந்தர தீர்வு கிடைத்து விடுமென தெரிவித்த கடற்தொழில் அமைச்சர் இந்த வருடமும் கச்சதீவில் பேச்சுவார்த்தை என்று கூறிக்கொண்டு செல்வதாக வடமராட்சி வடக்கு, கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் நா.வர்ணகுலசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளா

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நா.வர்ணகுலசிங்கம் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

கடற்தொழில் அமைச்சர் அடிக்கடி கூறுவார் செல்வதைதான் செய்கிறேன் செய்வதைதான் செல்லுவேன் என்று எனவே இதனை தாம் வரவேற்பதாக நா.வர்ணகுலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

கச்சதீவிற்கு பேச்சுவார்த்தைக்கு செல்கின்ற அனைவரும் கட்சியை பிரதிநித்துவப்படுத்துவதாகவும் முல்லைத்தீவில் நேரடியாக தேர்தலில் போட்டியிடுகின்ற மூன்று வேட்பாளர்களும் உள்ளடங்குவதாகவும் நா.வர்ணகுலசிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்தையில் மீனவர்கள் யாரும் அழைக்கப்படவில்லை என்றும் நா.வர்ணகுலசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறிப்பாக, சட்டவிரோதமாக தொழில் செய்பவர்களே இந்த கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக நா.வர்ணகுலசிங்கம் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

ad

ad