புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2023

யாழ்ப்பாணத்தின் மேல் உச்சம்!

www.pungudutivuswiss.com
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு தினமான 14 ஆம் திகதிக்கு பின்னர்
 யாழ்.மாவட்டத்திற்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ள நிலையில்
 வெப்பநிலை 35 பாகையை தாண்டிச்செல்லலாம்; என யாழ்.பிராந்திய 
வளிமண்டலத் திணைக்களப் பொறுப்பதிகாரி தர்மலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

மே முதலாம் திகதி வரை அதிகரித்த வெப்பநிலை வடக்கில் காணப்படும். சூரியன் வட துருவம் நோக்கிய பாதையில் நகரும் நிலையில் கடந்த 5 ஆம் திகதி இலங்கைக்கு தெற்காக அம்பாந்தோட்டை பகுதியில் உச்சம் கொண்டிருந்தது. அங்கிருந்து சூரியன் நகர்ந்து வரும் நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு பின்னர் யாழ்.மாவட்டத்துக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளது. இதனால் 14 ஆம் திகதிக்கு பின்னர் 35 பாகையை விட அதிகமாக வெப்பம் காணப்படும். ஏதிர்வரும் மே முதலாம் திகதி வரை தொடருமெனவும் தர்மலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை மேலும் யாழ்.மாவட்டத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பிற்பகல் வேளையில் பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தர்மலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். 

ad

ad