புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2023

விவசாயிகள் போராட்டம்: உக்ரைன் தானிய இறக்குமதிக்குத் தடை விதித்தது போலந்து மற்றும் ஹங்கேரி

www.pungudutivuswiss.com
போலந்து மற்றும் ஹங்கேரியில் உள்ளூர் விவசாயிகள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் முனைப்பு பெற்றதைத் தொடர்ந்து போலந்தும்
ஹங்கேரியும் உக்ரைனில் இருந்து தானியங்கள் மற்றும் பல உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக தடை செய்ய ஒப்புக்கொண்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் மூலம் சந்தையில் உக்ரேனிய தானியங்கள் அதிகமாக இருப்பதால் போராடும் உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

மத்திய ஐரோப்பாவில் விநியோகச் சங்கிலி பிரச்சனைகளால் கடைகளில் உக்ரைனியத் தானியங்கள் குவித்து காணப்பட்டதால் விலை சரிந்தன. இதனால் உள்ளூர் விவசாயிகள் அரசாங்கதிற்கு எதிராக போராட்டங்களுக்கு வழிவகுத்தன. மற்றும் போலந்தின் விவசாய மந்திரி பதவி விலகத் தூண்டியது.

போலந்தின் ஆளும் சட்டம் மற்றும் நீதிக் கட்சி (PiS) கட்சித் தலைவரான ஜரோஸ்லாவ் கசின்ஸ்கி, போலந்து கிராமப்புறங்கள் நெருக்கடியான தருணத்தைஎதிர்கொள்வதாகவும், போலந்து உக்ரைனை ஆதரிக்கும் அதே வேளையில், அதன் விவசாயிகளைப் பாதுகாக்க அது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

உக்ரைனின் விவசாயக் கொள்கை அமைச்சகம் இந்த முடிவை கடுமையான மற்றும் ஒருதலைப்பட்சமானது என்று கண்டித்துள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பின் காரணமாக உக்ரேனிய விவசாயிகள் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர் என்று வாதிட்டது.

தானியப் பிரச்சினையைத் தீர்க்க உக்ரைனுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கத் தயாராக இருப்பதாக போலந்து அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இதற்கிடையில் ஹங்கேரிய அரசாங்கம் உக்ரைனின் விவசாயப் பொருட்கள் மீதான அனைத்து இறக்குமதி வரிகளையும் நீக்குவதற்கான கடந்த ஆண்டு முடிவை மறுஆய்வு உட்படுத்துவதாகவும் ஐரோப்பிய விதிமுறைகளில் மாற்றங்களை எதிர்பார்க்கிறது.

தானியங்கள் மற்றும் பிற உணவு இறக்குமதிகள் மீதான தடை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது பற்றிய விவரங்களை ஹங்கேரி தெரிவிக்கவில்லை.

வார்சா மற்றும் புடாபெஸ்ட் ஆகிய இரண்டும் ஜூன் 30 வரை தங்கள் தடைகள் அமலில் இருக்கும் என்று தெரிவித்தன.

ad

ad