புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2023

ஜனாதிபதி ரணிலுடனான சந்திப்பு குறித்து தமிழ் எம்.பிக்கள் அதிருப்தி!

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு திருப்திகரமாக அமையவில்லை என தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். நேற்றைய  சந்திப்பின் பின் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்கள் இதனை்த் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு திருப்திகரமாக அமையவில்லை என தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். நேற்றைய சந்திப்பின் பின் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்கள் இதனை்த் தெரிவித்துள்ளனர்.

'சந்திப்பு பெரிதாக நன்மை இல்லாவிட்டாலும், சில விடயங்கள் ஆறுதல் தந்தது' என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

'இன்றைய சந்திப்பில் காணி, சிறைக்கைதிகள், பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற பல விடயங்கள் பேசப்பட்டது. ஆனால், தமிழர் தரப்புக்கு இன்றைய சந்திப்பு திருப்திகரமாக அமையவில்லை' என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்.

'ஒரு பேச்சுவார்த்தைக்கு வரும் போது பல எதிர்பார்ப்புடன் தான் நாம் வருகிறோம். ஆனால் பேச்சுவார்த்தை வாயிலாக எம்மை ஏமாற்ற நினைத்தால், ஜனாதிபதிக்டீக ஏமாற்றம் கிடைக்கும்' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குறிப்பிட்டார்.

மாகாண காணி விடயங்களை கையாள ஒம்புட்ஸ்மன் ,1986 பிற்பட்ட வன இலாகா கைப்பற்றிய காணிகள் விடுவிப்பு, இராணுவம் கைப்பற்றியுள்ள மக்களின் காணிகள் விடுவிப்பு , தொல் பொருள் திணைக்களத்தின் அடாவடித்தனமான செயற்பாடு போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இன்று அதிகாரப் பகிர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

ad

ad