புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2023

இங்கிலாந்தின் ஸ்டோம் சடோ ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா அறிவிப்பு

www.pungudutivuswiss.com


உக்ரைனுக்கு இங்கிலாந்து வழங்கிய ஸ்டோம் சடோ (Storm Shadow) என்ற அதிநவீன ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து முதன்முறையாக உக்ரைனுக்கு வழங்கிய நீண்ட தூர Storm Shadow ஏவுகணையையும், அமெரிக்காவின் HIMARS-ஏவுகணை மற்றும் HARM ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தியதாகக் கூறியது.

ரஷ்யாவிற்கு அஞ்சி, தொலை தூர இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க மேற்கத்திய நாடுகள் தயக்கம் காட்டிவந்தன.

இந்நிலையில், 250 கிலோமீட்டர் அப்பால் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் Storm Shadow ஏவுகணையை உக்ரைனுக்கு வழங்கியதாக இங்கிலாந்து வெளிப்படையாக அறிவித்தது.

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள லுகான்ஸ்க் நகர தொழிற்சாலைகள் மீது அந்த ஏவுகணைகளை செலுத்தி உக்ரைன் தாக்குதல் நடத்திவந்த நிலையில், முதல்முறை அந்த ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ad

ad