புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூன், 2023

தமிழ் மக்கள் எவ்வாறு சட்டம், ஒழுங்கு மீது நம்பிக்கை கொள்வார்கள்?

www.pungudutivuswiss.com


இன நல்லிணக்கம் தொடர்பில் ஒருபுறம் கதைத்து விட்டு பிறிதொரு புறம் தமிழ் பிரநிதிக்கு எதிராக
செயற்படும் போது தமிழ் மக்கள் எவ்வாறு சட்டம், ஒழுங்கு மீது நம்பிக்கை கொள்வார்கள்? என்று
தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.யான ஹரிணி அமரசூரிய கேள்வியெழுப்பினார்.

இன நல்லிணக்கம் தொடர்பில் ஒருபுறம் கதைத்து விட்டு பிறிதொரு புறம் தமிழ் பிரநிதிக்கு எதிராக செயற்படும் போது தமிழ் மக்கள் எவ்வாறு சட்டம், ஒழுங்கு மீது நம்பிக்கை கொள்வார்கள்? என்று தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.யான ஹரிணி அமரசூரிய கேள்வியெழுப்பினார்

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற நிதி,பொருளாதார உறுதிப்படுத்துகை மற்றும் தேசிய கொள்கைகள் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்ட கேள்வியை அவர் எழுப்பினார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அவர் கைது செய்யப்பட்ட விதம் முற்றிலும் தவறானது. இதன் மூலம் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கும் செய்தி என்ன? இன நல்லிணக்கம் தொடர்பில் ஒருபுறம் கதைத்து விட்டு பிறிதொரு புறம் தமிழ் பிரநிதிக்கு எதிராக செயற்படும் போது தமிழ் மக்கள் எவ்வாறு சட்டம், ஒழுங்கு மீது நம்பிக்கை கொள்வார்கள்?

குற்றமிழைப்பவர்களை சமமாக நடத்த வேண்டும். பாராளுமன்றத்தில் இந்த வித்தியாசத்தை அவதானித்தோம். ஆளும் தரப்புக்கு ஒரு சலுகை எதிர்க்கட்சிக்கு பிறிதொரு சலுகை அரசாங்கம் மனம்போன போக்கில் செயற்படுகிறது” என்றார்.

ad

ad