புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2023

முதல் டி20 கிரிக்கெட்: 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி திரில் வெற்றி

www.pungudutivuswiss.com
 இந்திய அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி திரில் வெற்றி பெற்றது தரோபா, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. அடுத்ததாக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் 3 ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசிலும், கடைசி இரு ஆட்டங்கள் அமெரிக்காவிலும் நடைபெறுகிறது. Also Read - முதல் டி20 : இந்திய அணிக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோமன் பவெல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய செய்தது. Also Read - இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 : வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு தொடக்க வீரர்களாக கைல் மேயர்ஸ் , பிராண்டன் கிங் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் கைல் மேயர்ஸ் 1 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து பிராண்டன் கிங் 28 ரன்களும், ஜான்சன் சார்லஸ் 3 ரன்களும் எடுத்து வெளியேறினார். Also Read - ஆசிய கோப்பை போட்டியிலும் கே.எல்.ராகுல் விளையாடமாட்டார் என தகவல்...! அடுத்து களமிறங்கிய நிகோலஸ் பூரன் , ரோமன் பவெல் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்கத்தொடங்கினர். சிறப்பாக ஆடி ரன்கள் சேர்த்த பூரன் 41 ரன்களும் , அடுத்து களமிறங்கிய ஹெட்மயர் 10 ரன்களும், அதிரடி காட்டிய கேப்டன் பவெல் 48 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். Also Read - இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் இன்று நடக்கிறது பின்னர் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் , சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் சுப்மன் கில் 3 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து இஷான் கிஷன் 6 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் அதிரடி காட்டி வந்த திலக் வர்மா 39 (22) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். நிதானமாக ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் சஞ்சு சாம்சன் 12 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அக்சர் பட்டேல் 13 ரன்களில் கேட்ச் ஆனார். கடைசி ஓவரில் வெற்றிபெற 10 ரன்கள் தேவைப்பட்டநிலையில் குல்தீப் யாதவ் 3 ரன்னில் போல்ட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து அர்ஷ்தீப் சிங் 12 ரன்களில் ரன் அவுட் ஆனார். முடிவில் சாஹல் 1 ரன்ன்னும், முகேஷ் குமார் 1 ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் ஷேப்பர்டு, மேக்கோய் மற்றும் ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஹேசைன் ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி திரில் வெற்றி பெற்றது. இதன்படி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை பெற்றுள்ளது.

ad

ad