புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2023

ஆசிய கோப்பைக்கான இலங்கை அணி: வெளியானது விபரம்

www.pungudutivuswiss.com
இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியக்கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியக்கிண்ணத் தொடர் நாளை புதன்கிழமை ஆரம்பிக்கவுள்ளதுடன், இலங்கை அணி தங்களுடைய முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை வியாழக்கிழமை (31) கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.

>>முதலிரண்டு போட்டிகளை தவறவிடும் இந்தியாவின் முன்னணி வீரர்!

அணியில் ஏற்பட்டிருந்த தொடர்ச்சியான உபாதைகள் காரணமாக இறுதிக்குழாத்தை அறிவிப்பதற்கு தாமதத்தை ஏற்படுத்தியிருந்த இலங்கை கிரிக்கெட் சபை, பல முன்னணி வீரர்களின்றி குழாத்தை அறிவித்திருக்கிறது.

முக்கிய மாற்றமாக நடைபெற்றுமுடிந்த LPL தொடரில் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் என சகலதுறையிலும் பிரகாசித்திருந்த வனிந்து ஹஸரங்க நீக்கப்பட்டுள்ளமை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான துஷ்மந்த சமீர அணியிருந்து வெளியேறியுள்ளார். கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக்கிண்ண தொடரின்போது உபாதைக்கு முகங்கொடுத்திருந்த இவர், தொடர்ச்சியாக தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்திருந்தார். எனினும் சத்திரசிகிச்சையை மேற்கொண்டு இறுதியாக நடைபெற்ற LPL தொடரில் பி-லவ் கண்டி அணிக்காக ஒருசில போட்டிகளில் விளையாடியிருந்தார்.

எனினும் இதன்போது மீண்டும் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த இவர், தற்போது ஆசியக்கிண்ணத்தொடரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இவருடன் லஹிரு குமார மற்றும் டில்சான் மதுசங்க ஆகியோரும் உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் மேற்குறித்த நான்கு வீரர்களுடன் உலகக்கிண்ண தகுதிகாண் தொடரில் இலங்கை அணிக்காக விளையாடியிருந்த சஹான் ஆராச்சிகே மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், இளம் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் துனித் வெல்லாலகே அணியில் இடத்தை பிடித்துக்கொண்டுள்ளார்.

இதேவேளை முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களின் வெளியேற்றம் காரணமாக பினுர பெர்னாண்டோ மற்றும் பிரமோத் மதுசான் ஆகியோர் LPL தொடரில் வெளிப்படுத்திய பிரகாசிப்புகள் காரணமாக மீண்டும் அணிக்குள் இடத்தை தக்கவைத்துள்ளனர்.2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சார்பில் விளையாட இருக்கும் வீரர்கள் குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

அந்தவகையில், தசுன் ஷானக (தலைவர்), குசல் மெண்டிஸ் (துணை தலைவர்), பெத்தும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, குசல் ஜனித்பெரேரா, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, மகேஷ் தீக்ஷனா, துனித் வெல்லலகே, மதீஷ பத்திரன, கசுன் ராஜித, துஷான் ஹேமந்த, பினுர பெர்னாண்டோ, பிரமோத் மதுஷன் ஆகிய வீரர்களே பங்கேற்கவுள்ளனர்.

அணியில் தெரிவு செய்யப்பட்ட நட்சத்திர விரர் வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க, மற்றும் லஹிரு குமார ஆகியோர் காயம் காரணமாக பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த வீரர்களுக்குப் பதிலாக பினுர பெர்னாண்டோ மற்றும் பிரமோத் மதுஷன் ஆகியோரின் பெயர்கள் தாமதமாக சேர்க்கப்பட்டதால், விளையாட்டு அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

குசல் ஜனித் பெரேரா காய்ச்சலில் இருந்து மீண்டு முழுமையாக குணமடைந்தவுடன் அணியில் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆசிய கோப்பை 2023 ஆகஸ்ட் 30 (நாளையதினம்) தொடங்கி எதிர்வரும் செப்டம்பர் 17 வரை நடைபெறும்.

ad

ad