புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2023

காங்கேசன்துறை- நாகபட்டினம் கப்பல் சேவை குறித்து விரைவில் நல்ல செய்தி!

www.pungudutivuswiss.com


காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கு இடையேயான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் தெரிவித்தார்.

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கு இடையேயான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

ஆரம்பத்தில் காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே கப்பல் சேவை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே குறித்த பயணப்பாதை மாற்றப்பட்டமையினாலேயே தாமதம் ஏற்பட்டது.

குறித்த கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்காக தமிழ்நாடு நாகபட்டினத்தில் பயணிகள் இறங்குமிடம் , சுங்கம் போன்ற அமைக்கும் பணிகளை இடம்பெற்று வருகின்றன.

அப்பணிகள் நிறைவடைந்தவுடன் கப்பல் சேவையினை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். கப்பல் சேவை தொடர்பிலான நல்லதொரு செய்தியினை மக்களுக்கு விரைவில் அறிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad