புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2023

சனல் 4 கயிறில் தொங்குபவர்களுக்கு அது மரணக் கயிறாக மாறும்!

www.pungudutivuswiss.com


அரசாங்கத்தை தாக்குவதாக கூறி எமது இராணுவத்தினரையும் எமது தாய்நாட்டையும் தாக்குவதற்கும் இடமளிக்க முடியாது, சனல் 4 கயிற்றில் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அது மரணக் கயிறாக மாறும் என  பிவித்துரு ஹெல உறுமய தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தை தாக்குவதாக கூறி எமது இராணுவத்தினரையும் எமது தாய்நாட்டையும் தாக்குவதற்கும் இடமளிக்க முடியாது, சனல் 4 கயிற்றில் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அது மரணக் கயிறாக மாறும் என பிவித்துரு ஹெல உறுமய தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

'ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையை கோருபவர்கள் சில விடயங்களை புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவின் எப்பிஐ அமைப்பு இங்கே வந்தது, அவுஸ்திரேலியா பெடரல் பொலிஸ் வந்தது. அவர்கள் இங்கே விசாரணை நடத்தி அறிக்கையை முன்வைத்துள்ளனர்.

ஏன் அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கேட்கின்றோம். இதேவேளை இந்த பிரச்சினைகளை மேற்குலக நாடுகளில் இருந்துகொண்டு இங்கே பிரிவினை வாதத்திற்கு முயற்சிப்பவர்களுக்கு இடமளித்து விடக் கூடாது

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் இரத்தம் மற்றும் கண்ணீரை அரசியல் லாபத்திற்காக மாற்றுவதற்கு கீழ்த்தரமான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 2001 - 2004 காலத்தை போன்றும் 2015 காலத்தை போன்றும் புலனாய்வுத்துறையை வீழ்ச்சியடைய செய்து இராணுவத்தினரை பலவீனமாவர்களாக்கி மீண்டும் நாட்டை இரத்த வெள்ளத்திற்குள் தள்ளும் முயற்சிகளுக்கு இடமளிக்க முடியாது” என்றார்

ad

ad