புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2023

இசைப்பிரியா மற்றும் பலரின் ஆடைகளை களைந்த சனல் 4இன் காணொளியை விசாரணை செய்வீர்களா..! சபையில் பகிரங்கம்

www.pungudutivuswiss.com
தமிழீழ விடுதலைப் புலிகளுடைய, புலிகளின் குரலில் பணிபுரிந்த இசைபிரியா அங்கு பணிபுரிந்தார் என்பதற்காக அவருடைய ஆடைகள் களையப்பட்டு அவரை மானபங்கப்படுத்தி மிகவும் கொடூரமாக கொலை செய்த காணொளியை சனல் 4 ஊடகம் வெளியிட்டிருந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
என்னை பொறுத்தவரை இது தொடர்பில் முழுமையான விசாரணையாக நடைபெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4 இற்கு கோட்டாபய வழங்கிய பதில்
இலங்கையின் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4 இற்கு கோட்டாபய வழங்கிய பதில்
சனல் 4 ஊடகம் வெளியிட்ட காணொளி
அவர் மேலும் தெரிவிக்கையில், 2009ஆம் ஆண்டு மிக கொடூரமாக எம்மின மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர். அதையும் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது. அதாவது ஒரு நீர்த்தடாகம் இருக்கிறது. நீர்த்தடாகத்திற்கு அருகில் சிறுவர்கள், ஆண்கள் ஆடைகள் இன்றி இருக்கிறார்கள்.
அதில் ஒரு பெண், தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிகளின் குரலில் பணிபுரிந்த இசைபிரியா அங்கு பணிபுரிந்தார் என்பதற்காக அவருடைய ஆடைகள் களையப்பட்டு அவரை மானபங்கப்படுத்தி மிகவும் கொடூரமாக கொலை செய்த காணொளியை சனல் 4 ஊடகம் வெளியிட்டிருந்தது.
கோட்டாபயவை கோபப்படுத்திய செய்தி: உடன் பிறப்பிக்கப்பட்ட கட்டளை - வெளியான அதிர்ச்சி தகவல்
கோட்டாபயவை கோபப்படுத்திய செய்தி: உடன் பிறப்பிக்கப்பட்ட கட்டளை - வெளியான அதிர்ச்சி தகவல்
ஆக 2009ஆம் ஆண்டு மிக கொடூரமாக ஆண்கள், சிறுவர்கள், இசைபிரியா உள்ளிட்டோர் மானபங்கப்படுத்தி கொலை செய்யப்பட்டதை சனல் 4 ஊடகம் வெளியிட்டிருந்தது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த விடயத்தை பலமுறை இந்த சபையில் கேட்டிருக்கிறார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பாக விசாரணை செய்தீர்களா என்ற தொனியில் கேள்வி எழுப்பியுள்ளார்

ad

ad