புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 அக்., 2023

இஸ்லாமியர் வாக்குகளின் பக்கம் திரும்புகிறதா அ.தி.மு.க?

www.pungudutivuswiss.com
பா.ஜ.க. கூட்டணியைவிட்டு அ.தி.மு.க. வெளியேறிய சில நாட்களிலேயே தமீமுன் அன்சாரி எடப்பாடி கே. பழனிச்சாமியை சந்தித்தார்.
நீண்ட நாட்களாக சிறையில் உள்ள இஸ்லாமியக் கைதிகளின் விடுதலைக்குக் குரல் கொடுத்திருப்பதன் மூலம், பா.ஜ.க. கூட்டணியால் தான் இழந்ததாகக் கருதும் இஸ்லாமியர்களின் வாக்குகளை அ.தி.மு.க. ஈர்க்க முயல்கிறது. இது பலனளிக்குமா?

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் பா.ஜ.கவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டிருந்த அ.தி.மு.க. தான் இழந்ததாகக் கருதும் சிறுபான்மையினரின் வாக்குகளை நோக்கித் திரும்பும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான்.

அந்த நிலையில்தான் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி எடப்பாடி கே. பழனிச்சாமியைச் சந்தித்தார்.

இந்தச் சந்தப்பு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமையன்று சட்டப்பேரவையில் இஸ்லாமியக் கைதிகள் தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அதன் மீது பேசிய அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமி, நீண்ட நாட்களாக சிறையில் உள்ள 36 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரினார்.

"கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 16 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 20 பேர் பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனைப் பெற்று சிறையில் உள்ளனர். மொத்தம் 36 இஸ்லாமியர்கள் 20 முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகின்றனர்.

அவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல இஸ்லாமிய அமைப்புகளும் அரசியல் கட்சியினரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இவர்களின் வயது மூப்பு, உடல்நலக்குறைவு, மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவர்களை விடுதலை செய்ய முன்வர வேண்டும்" என்று பேசினார்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஒதுக்கீட்டில் என்ன பிரச்னை? அதிமுக ஆட்சியில் கருணாநிதிக்கு என்ன நடந்தது?
11 அக்டோபர் 2023
உலகக்கோப்பையில் வரலாறு படைத்த ரோகித்: கோலி - நவீன் சந்தித்த போது என்ன நடந்தது தெரியுமா?
11 அக்டோபர் 2023
சிறுபான்மையினர் மீது அதிமுகவிற்கு திடீர் பாசமா ?
அதிமுகபட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
சிறுபான்மை மக்களை இவர்கள்தான் (தி.மு.க.) ஆதரிப்பதைப் போலவும் உதவிசெய்வதைப் போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்திருந்தார்கள் எனப் பேசினார் எடப்பாடி பழனிச்சாமி.

இதற்குப் பிறகு அவையில் முதலமைச்சருக்கும் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தை அடுத்து வெளிநடப்புச் செய்ததது அ.தி.மு.க. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தகு எடப்பாடி கே. பழனிச்சாமி அளித்த பேட்டி, பல விஷயங்களைக் கோடிட்டுக் காட்டியது.

"இஸ்லாமியர்கள் மீது அ.தி.மு.கவுக்கு ஏன் திடீர் பாசம் என கேள்வி எழுப்புகிறார் முதலமைச்சர். இதற்கு பதில் சொல்ல எழுந்தால், அதற்கு அனுமதி மறுக்கிறார் சபாநாயகர். இதுநாள் வரை சிறுபான்மை மக்களை ஒரு மாயாஜாலத்தில் வைத்துக்கொண்டிருந்தார்கள்.

சிறுபான்மை மக்களை இவர்கள்தான் (தி.மு.க.) ஆதரிப்பதைப் போலவும் உதவிசெய்வதைப் போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்திருந்தார்கள். சிறுபான்மையின மக்கள் எங்களை நாடும்போது, அவர்களுக்கு கோபம் வருகிறது. தி.மு.க. இஸ்லாமியர்களுக்கு என்ன செய்தது? நாங்கள் எவ்வளவோ செய்திருக்கிறோம்.

ஏதோ இவர்கள் மட்டும்தான் சிறுபான்மையினரை ஆதரிப்பதைப் போலவும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால்தான் சிறுபான்மையினரைப் பாதுகாப்பார்கள் என்பதைப் போலவும் மாயத் தோற்றத்தை ஏற்படுத்திவந்தார்கள். அந்தத் தோற்றம் கலையும்போது கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு எதிராகப் பேசுகிறார் முதலமைச்சர்" என்றார் எடப்பாடி கே. பழனிச்சாமி.

பா.ஜ.க. கூட்டணியைவிட்டு அ.தி.மு.க. வெளியேறிய சில நாட்களிலேயே தமீமுன் அன்சாரி எடப்பாடி கே. பழனிச்சாமியை சந்தித்தார். இந்த சந்திப்பை வைத்து, சிறுபான்மையினருக்கு ஆதரவாக தாங்களும் இருப்பதாக காட்டிக்கொள்ள அ.தி.மு.க. முயல்வதாக விமர்சனங்களும் எழுந்தன.

தமிழ்நாட்டு புகைப்பட கலைஞருக்கு சர்வதேச விருது - யார் அவர்? எதை படம்பிடித்தார்?
11 அக்டோபர் 2023
இந்தியர்களை நிர்வாண படங்கள் மூலம் மிரட்டும் சீன கடன் செயலிகள் - பிபிசி புலனாய்வில் அம்பலமான கொடூர மோசடி
11 அக்டோபர் 2023
அதிமுகபட மூலாதாரம்,AIADMK TWITTER
படக்குறிப்பு,
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமி, நீண்ட நாட்களாக சிறையில் உள்ள 36 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரினார்

'எந்த அரசியலும் இல்லை' - தமீமுன் அன்சாரி
ஆனால், அந்தச் சந்திப்பிற்குப் பின்னால் எந்த அரசியலும் இல்லை என்கிறார் தமீமுன் அன்சாரி.

"36 இஸ்லாமிய சிறைக் கைதிகள் விவகாரத்தை நாங்கள் நீண்ட காலமாகப் பேசிவருகிறோம். வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் இது தொடர்பாக ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டுமெனக் கோரி பா.ஜ.கவைத் தவிர்த்த எல்லாக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேசுவது என முடிவெடுத்தோம்.

அதன்படி முதலாவதாக, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன், தி.மு.கவைச் சேர்ந்த அமைச்சர் ரகுபதி, தொல். திருமாவளவன் ஆகியோரைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தோம்.

இதற்குப் பிறகுதான் எடப்பாடி கே. பழனிச்சாமியை சந்தித்தோம். ஆனால்,
அந்தச் சந்திப்பு மட்டும்தான் விவாதமானது" என்கிறார் தமீமுன் அன்சாரி.

ஆகவே இனி அ.தி.மு.க. இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருக்கும் என நம்புகிறீர்களா எனக் கோட்டபோது, "நாங்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவரக் கோரி சந்தித்தோம். அந்த விவகாரத்தில் அவர்கள் நல்ல முறையில் செயல்பட்டிருக்கிறார்கள், அவ்வளவுதான்" என்கிறார் தமீமுன் அன்சாரி.

ஆனால், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகள் முழுமையாக தி.மு.க. கூட்டணிக்குக் கிடைக்கக்கூடாது என்பதற்காக அ.தி.மு.க. இதுபோல செயல்படுவதாக குற்றம்சாட்டுகிறார் மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்ட மன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா.

"இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் சூழல் இருக்கிறது. அதை நடக்காமல் செய்யவேண்டும் என்பதற்காக, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியதைப்போல அ.தி.மு.க. சொல்கிறது.

இஸ்லாமியக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை 2023ல் எழக்கூடிய புதிய கோரிக்கை அல்ல. 2011லிருந்து சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டுவரும் கோரிக்கைதான். அதற்குப் பிறகும்கூட பல போராட்டங்கள் நடத்தியிருக்கிறோம். அப்போதெல்லாம் அ.தி.மு.க. எதையும் செய்யவில்லை.

தமிழ்நாட்டில் இனி புதிய மருத்துவ கல்லூரி தொடங்கவே முடியாதா? புதிய விதிகளால் என்ன சிக்கல்?
11 அக்டோபர் 2023
டைட்டன் நீர்மூழ்கி விபத்து: 114 நாள் தேடுதலுக்கு பலன் - கடலின் அடியாழத்தில் என்ன கிடைத்தது தெரியுமா?
11 அக்டோபர் 2023
சிறுபான்மையினர்பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
36 இஸ்லாமியர்கள் பல வருடங்களாக சிறையில் இருக்கிறார்கள்.

தி.மு.க. நடவடிக்கை எடுக்க ஆரம்பித்த பிறகு அ.தி.மு.க. தங்களால்தான் இது நடந்தது என்பதைப் போலக் காட்டுவதற்காக இந்த விவகாரத்தை எழுப்புகிறார்கள். உண்மையான அக்கறை இருந்திருந்தால் முன்பே செயல்பட்டிருக்கலாமே. அவர்களது நோக்கம் தி.மு.க. கூட்டணிக்குச் செல்லக்கூடிய வாக்குகளைப் பிரித்து பா.ஜ.கவுக்கு உதவுவதுதான்.

ஆகஸ்ட் 24ஆம் தேதியே 49 சிறைக் கைதிகளை விடுதலை செய்வதற்கான கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுவிட்டன. ஆகவே இவர்கள் கோரிக்கை வைத்து இது நடப்பதாக சொல்ல முடியாது" என்கிறார் எம்.எச். ஜவஹிருல்லா.

தமிழ்நாட்டில் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தமிழக மக்கள் தொகையில் 5.86 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். ஆனால், 2021ஆம் ஆண்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமே 7 இஸ்லாமிய உறுப்பினர்கள்தான் தேர்வுசெய்யப்பட்டனர்.

2019ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல், 2021ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் அ.தி.மு.க., பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்ததால், இஸ்லாமியக் கட்சிகளுக்கு தி.மு.கவே ஒரு வாய்ப்பாக இருந்தது. ஆனால், தற்போது அந்தக் கூட்டணி உடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அ.தி.மு.கவும் இன்னொரு வாய்ப்பாக இருக்கலாம்.

தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியிருந்தாலும் கூட்டணியில் இருந்தபோது, சிறுபான்மையினர் தங்களுக்கு எதிரானதாகக் கருதிய சிஏஏ சட்டத்திற்கு ஆதரவளித்தது. அந்தச் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானதல்ல என்றும் விளக்கமளித்தது.

ஆனால், எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அ.தி.மு.க. எப்போதுமே சிறுபான்மையினருக்கு ஆதரவாகவே செயல்பட்டிருக்கிறது; அதன் தொடர்ச்சிதான் தற்போதைய நிலைப்பாடு என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

"36 இஸ்லாமியர்கள் பல வருடங்களாக சிறையில் இருக்கிறார்கள். ஆகவே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறோம்.

எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து அ.தி.மு.க சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறது. 1998ல் எல்.கே. அத்வானியைக் குறிவைத்து குண்டுவெடுப்பு நடந்தவுடன் தன் ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில் அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியது தி.மு.கதான். ஆகவே, இப்போது சிறுபான்மையினர் வாக்குகளுக்காக இதைச் செய்வதாக சொல்லக்கூடாது. அவர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். வரும் தேர்தலில் அது தெரியவரும்" என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

ad

ad