புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜன., 2024

ஜப்பானில் 2 விமானங்கள் மோதிக் கொண்டதில் ஒரு விமானம் தீக்கிரை - 385 பேரின் கதி என்ன?

www.pungudutivuswiss.com
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று (ஜன. 02) டோக்கியோவில் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கும்போது தீப்பிடித்தது.

என்.ஹெச்.கே எனும் ஜப்பானிய அரசு ஊடகத்தில் அதன் காணொளி வெளியானது. அதில், விமானத்தின் ஜன்னல்கள் மற்றும் அதன் கீழே தீப்பிடித்து எரிவதை காண முடிந்தது. விமானத்தின் ஓடுதளத்திலும் தீ பரவியது.

அந்த விமானம் தரையிறங்கும்போது அங்கிருந்த மற்றொரு விமானத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, அதிகாரிகளை மேற்கோள் காட்டி என்.ஹெச்.கே ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விபத்து ஏற்பட்டபோது உள்ளே பயணிகள் இருந்தனர்.

விமானத்திற்குள் இருந்த 367 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்பட 379 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக, என்.ஹெச்.கே. ஊடகம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

ஜே.ஏ.எல். 516 என்ற அந்த விமானம் ஹொகைடோவிலிருந்து புறப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.

ஜப்பானில் 2 விமானங்கள் மோதல்பட மூலாதாரம்,REUTERS
ஜப்பானில் 2 விமானங்கள் மோதல்பட மூலாதாரம்,SCREENGRAB
ஜப்பான் விமான விபத்துபட மூலாதாரம்,NHK
இரு விமானங்கள் மோதல்
379 பேருடன் வந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்குகையில் ஜப்பான் கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதிவிட்டதாக ராய்ட்டர்ஸ் மற்றும் என்.எச்.கே. செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன. அந்த கடலோர காவல்படை விமானத்தில் இருந்த 6 பேரில் ஒருவர் பத்திரமாக வெளியே வந்துவிட்டதாகவும், மேலும் 5 பேரின் நிலை என்னவென்று தெரிவில்லை என்றும் என்.எச்.கே. செய்தி வெளியிட்டுள்ளது.

ஜப்பானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு அந்த கடலோர காவல்படை விமானம் நிகாட்டா விமான நிலையத்திற்கு செல்லவிருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறியுள்ளது.

2 விமானங்களும் எப்போது, எப்படி மோதிக் கொண்டன என்பது குறித்து "விசாரிக்கப்பட்டு வருவதாக" கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் 2 விமானங்கள் மோதல்பட மூலாதாரம்,REUTERS
முழுவதும் எரிந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம்
இந்த விபத்தில், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் முழுவதும் எரிந்துவிட்டதாக தெரியவந்துள்ளது. அந்த தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு வடக்கு ஹொக்கைடோ தீவில் உள்ள சப்போரோ நகருக்கு அருகிலுள்ள நியூ சிட்டோஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

ஃபிளைட்ரேடர் எனும் இணையதளத்தின்படி, ஹனேடா விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 05:47 மணிக்கு தரையிறங்கியது.

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் 379 பேரும், கடலோர காவல்படை விமானத்தில் 6 பேரும் இருந்தனர். அவர்களில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த 379 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டனர். கடலோர காவல்படை விமானத்தில் ஒருவர் மட்டும் பத்திரமாக வெளியே வந்துள்ளார். மேலும் 5 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை.

இந்நிலையில், ஜப்பான் கடலோர காவல்படை விமானத்தின் உள்ளே இருந்த 5 பேரும் உயிரிழந்துவிட்டதாக, ஜப்பான் போக்குவரத்து துறை அமைச்சரை மேற்கோளிட்டு ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்த செய்தியை ஜப்பானிய அரசு ஊடகமான என்.ஹெச்.கே உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த விமானத்தின் விமானி மட்டும் தப்பித்துள்ளதாகவும் அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தைத் தொடர்ந்து ஹனேடா விமானநிலையத்தில் அனைத்து ஓடுதளங்களும் மூடப்பட்டதாக, அதன் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். மேலும், அந்த விமான நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜப்பான் விமான விபத்துபட மூலாதாரம்,GETTY IMAGES
பயணிகள் காப்பாற்றப்பட்டது எப்படி?
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தின் உள்ளே இருந்த அனைத்துப் பயணிகளும் காற்று நிரப்பப்பட்ட சாய்தளம் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

பிரிட்டனில் உள்ள கிரான்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து அமைப்புகள் துறையின் இயக்குநர் பேராசிரியர் கிரஹாம் பிரைத்வைட், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் உள்ளே இருந்த பயணிகளை காப்பாற்றுவதில் விமான குழுவினரும் விமானிகளும் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டியுள்ளார்.

"போக்குவரத்து பாதுகாப்பு என்று வரும்போது ஜப்பான் தனித்துவமான சாதனைகளை புரிந்துள்ளது," என தெரிவித்த அவர், ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகளை பாதுகாப்பதில் "உலக தலைவர்" என பாராட்டினார்.

"பயணிகளை வெற்றிகரமாக வெளியேற்றியது, எந்தளவுக்கு விமான குழுவினருக்கு அதுகுறித்து பயிற்சி அளித்துள்ளனர் என்பதை உணர்த்துகிறது" என்றார்.

மேலும், "அவர்களுடைய கவனம் முழுவதும் பயணிகளின் பாதுகாப்பு மீதுதான் இருந்துள்ளது" என்றார்.

மேலும், "விமானத்திலிருந்து வெளியேறிய கடைசி நபர்கள் விமான குழுவினர் தான். அவர்கள் நம்பமுடியாத வேலையைச் செய்துள்ளனர்" என்றார்.

14 பயணிகள் காயம்
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து 14 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி, ஜப்பானின் NHK தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

டோக்கியோ தீயணைப்புத் துறை 17 பேர் காயமடைந்ததாகக் கூறிய முந்தைய அறிக்கையை இது சரி செய்கிறது.

கடலோரக் காவல்படை விமானத்துடன் மோதியதைத் தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்ததையடுத்து, விமானத்தில் இருந்த 379 பேரும் விரைவாக வெளியேற்றப்பட்டனர்.

கடலோர காவல்படை விமானத்தில் இருந்த ஆறு பேரில் ஐந்து பேர் பலியாயினர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த சம்பவத்தால் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. ஆனால் உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணிக்கு அதன் மற்ற மூன்று ஓடுபாதைகள் மீண்டும் திறக்கப்பட்டு விமான சேவைகள் தொடங்கியுள்ளன.

ஜப்பானில் 2 விமானங்கள் மோதல்
நிவாரண விமானங்களுக்கு ஓடுபாதை முன்னுரிமை இல்லை - நிபுணர்
மத்திய ஜப்பானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இஷிகாவா மாகாணத்திற்கு உதவிகளை வழங்குவதற்காக கடலோர காவல்படை விமானம் டோக்கியோவிலிருந்து புறப்படவிருந்தது.

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தின் மீது அந்த விமானம் எப்படி, எப்போது மோதியது என்பதை ஆராய்ந்து வருவதாக ஜப்பானின் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் விமான நிலைய அதிகாரிகள் பூகம்ப அவசரகால உதவி விமானங்களுக்கு புறப்படுவதில் முன்னுரிமை வழங்கப்படவில்லை என்று பிபிசியிடம் லண்டனின் கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் அலெசியோ படலானோ கூறுகிறார்.

"பெரும்பாலான ஜப்பானிய விமான ஓடுதளங்களில் செய்யப்படும் அதே பிரச்சனையால் ஹனேடா விமான நிலையமும் பாதிக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறுகிறார்.

"இராணுவ மற்றும் நிவாரண விமானங்கள் மிகவும் தீவிரமான சூழ்நிலைகளில் மட்டுமே முன்னுரிமை பெறுகின்றன. இல்லையெனில் அவர்கள் ஓடுபாதைகளை பயணிகள் விமானங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் தகவல்
ஏ350 பயணிகள் விமானத்தின் தயாரிப்பாளரான ஏர்பஸ் நிறுவனம், கடலோரக் காவல்படை விமானத்துடன் மோதி தீப்பிடித்த பயணிகள் விமானத்தை இயக்கிய ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் தொடர்பில் இருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

"கூடுதல் விவரங்களைக் கிடைக்கும்போது தெரிவிக்கும்" என்று ஏர்பஸ் அந்த அறிக்கையில் கூறியுள்து.

ஜப்பானில் 2 விமானங்கள் மோதல்
விமான நிலையம் மீண்டும் இயங்கியது
விபத்து நடந்த நான்கு மணி நேரம் கழித்து, ஹனேடா விமான நிலையத்தின் சி ஓடுபாதையில் எஞ்சியிருப்பது ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தின் எரிந்த எச்சங்கள் மட்டுமே.

இந்த சம்பவத்திற்குப் பிறகு நான்கு ஓடுபாதைகள் மூடப்பட்டன, இதனால், ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

விமான நிலையத்தின் பார்வையாளர் பகுதி, அங்கே சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு என்ன நடந்தது? மற்றும் அங்கே நடந்துகொண்டிருந்த தீயை அணைக்கும் செயல்பாடுகளைக் காண்பதற்கான ஒரு இடமாக மாறியது.

பெரிய பயணிகள் விமானத்தை தீ மிக விரைவாக சூழ்ந்த போது்ம பல பயணிகளும் பணியாளர்களும் தப்பிக்க முடிந்தது அதிசயம்.

ad

ad