புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2024

உதைபந்தாட்ட வரலாற்றில் நூறாவது சுற்று போட்டி வெற்றியை பெற்று சாதனை படைத்தது யங்ஸ்டார்

www.pungudutivuswiss.com
Mit Öffentlich geteilt
Öffentlich




*****************************************************************
யங்ஸ்டார் பாரிஸ் சென்ட் பற்றிக்ஸ் கழகத்தை வென்று லிம்மத்தாள் கிண்ணத்தையும் ஆயிரம் சுவிஸ் பிராங்க் பரிசையும் வென்றுள்ளது
__________________________________________________________________
சுவிஸ் தமிழர் மத்தியில் விளையாட்டுத் துறையில் ஏராளமான பல சாதனைகளை கடந்த 3 3 வருடங்களாக அடைத்து வந்த யங்ஸ்டார் விளையாட்டு கழகம் ஸ்விட்சர்லாந்து மற்றும் ஐரோப்பா ரீதியாக பல சுற்றும் போட்டிகளில் பங்கு பற்றி ஏராளமான வெட்டிகளை தக்க வைத்துக் கொண்ட ஒரு சாதனைக் கழகம் இத்தனை சாதனைகளை படைத்தாலும் அகங்காரம் இன்றி அலட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து முன்னேறி வருகின்றது யங்ஸ்டார் ஸ்விட்சர்லாந்தில் அதிக சுற்று போட்டிகளை அதுவும் 100 சுற்று போட்டிகளை வென்ற ஒரு கழகமாக இன்று தனது சாதனை முத்திரையை பதித்துள்ளது அத்தோடு மட்டுமின்றி அதிக தடவை மாவீரர் கிண்ணம். கிட்டு கிண்ணம். தமிழ் ஈழ கிண்ணம். சுவிஸ் வருடாந்த தரவரிசை முதலாம் இடத்து சம்பியன் .லீக் சாம்பியன் என அனைத்திலுமே முதல் இடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது
சுவிஸ் லிமிட்டால் கிண்ணத் துக்கான இன்றைய சுற்றுப்போட்டியில் யங்ஸ்டார் கழகம் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் பாரிசில் இருந்து வந்திருந்த சென்ட் பட்டிக்ஸ் கழகத்தை இரண்டுக்கு ஒன்று என்ற ரீதியில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது இன்றைய சுற்று போட்டியில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று பதினைந்து கோல்களை அடித்து எதிரணியிடமிருந்து இரண்டு கோல்களை மட்டுமே வாங்கி மிகவும் சிறப்பாக களமாடி இந்த கோப்பை தன் வசம் ஆக்கியது

ad

ad