புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2024

ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் அல்லது பதவியை நீடிக்க வேண்டும்! - ஐதேக புது நிபந்தனை.

www.pungudutivuswiss.com


நாட்டை அபிவிருத்தி செய்து கொண்டு முன்னெடுத்துச்செல்ல ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் அல்லது தேர்தலை ஒத்திவைத்து இன்னும் சிறிது காலம் ரணில் விக்ரமசிங்கவுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். இந்த  இரண்டு தீர்வுகளைத் தவிர வேறு எந்த முடிவு எடுத்தாலும் நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாமல் போகும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

நாட்டை அபிவிருத்தி செய்து கொண்டு முன்னெடுத்துச்செல்ல ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் அல்லது தேர்தலை ஒத்திவைத்து இன்னும் சிறிது காலம் ரணில் விக்ரமசிங்கவுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். இந்த இரண்டு தீர்வுகளைத் தவிர வேறு எந்த முடிவு எடுத்தாலும் நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாமல் போகும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்க பல்வேறு அர்ப்பணிப்புகளுக்கு மத்தியில் நடவடிக்கைகளை எடுத்துவந்தார். அவர் எடுத்த கஷ்டமான தீர்மானங்கள் காரணமாகவே குறுகிய காலத்தில் யாரும் எதிர்பார்க்காதவகையில் பொருளாதார ரீதியில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்கள் எதிர்கொண்டுவந்த கஷ்டமும் தற்போது இல்லை. நாடடின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த வேலைத்திட்டங்களே அதற்கு காரணமாகும்.

வங்குராேத்து அடைந்துள்ள எமது நாட்டை அந்த நிலையிலிருந்து முழுமையாக மீட்பதற்கு இந்த அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களை அவ்வாறே முன்னெடுத்துச் செல்லவேண்டும். அந்த வேலைத்திட்டங்கள் இடை நுடுவில் நிறுத்தப்பட்டால், மீண்டும் நாடு பொருளாதார ரீதியில் நெருக்கடி நிலையை எதிர்கொள்ள நேரிடும்.

இவ்வாறான நிலையில் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டால் அரச இயந்திரங்கள் முறையாக இயங்காது. அபிவிருத்தி திட்டங்கள் இடை நடுவில் நிறுத்தப்படும். அதனால்தான் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு ஒரு யோசனையை முன்வைத்தார்.

அதில் தவறு எதுவும் இல்லை. அவர் இந்த யோசனையை எதிர்க்கட்சிக்கே முன்வைத்தார். ஏனெனில் இதுதொடர்பாக பாராளுமன்றமே தீர்மானிக்க முடியும். அவ்வாறு இல்லாமல் தேர்தலை ஒத்திவைக்குமாறு அவர் தெரிவிக்கவில்லை. ரங்கா பண்டாரவின் இந்த யோசனைக்கு எதிர்க்கட்சிகள் ஏன் பதற்றமடைய வேண்டும் என கேட்கிறோம்.

ஆரம்பித்திருக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களைத் தொடர்ந்து கொண்டுசெல்வதற்கு ரணில் விக்ரமசிங்கவுக்கே அது தொடர்பான ஞானம் இருக்கிறது. புதிதாக வேறு யாரும் அதிகாரத்துக்கு வந்தால் இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் போகும்.

எனவே நாட்டை அபிவிருத்தி செய்து முன்னுக்கு கொண்டுசெல்ல இரண்டு தீர்வுகளே இருக்கின்றன. அதாவது, அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை உரிய காலத்தில் நடத்தி, அதில் நாட்டு மக்கள் அனைவரும் ரணிவ் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்துகொள்ள வேண்டும்.

அல்லது ஜனாதிபதி தேர்தலைக் குறிப்பிட்ட காலத்துக்கு பிற்போட்டு ஜனாதிபதி ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச்சென்று நாட்டை முன்னேற்றுவதற்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு சிறிது காலம் கொடுக்க வேண்டும். இந்த இரண்டு தீர்வுகளைத் தவிர வேறு எந்த தீர்மானங்களை எடுத்தாலும் நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதை யாராலும் தடுக்க முடியாமல் போகும் என்றார்.

ad

ad