புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2024

பள்ளிமுனை கடற்பரப்பில் காற்றுடன் கடும் மழை - வள்ளம் கடலில் மூழ்கி மீனவர் பலி

www.pungudutivuswiss.com

மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் இருந்து நேற்று மாலை  வள்ளத்தில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வள்ளம் மூழ்கி கடலில் விழுந்து உயிரிழந்தார். உயிரிழந்தவர் மன்னார் பள்ளிமுனை மேற்கு பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.ஜான்சன் என்ற குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் உள்ளிட்ட சில மீனவர்கள் வள்ளம் ஒன்றில் தொழிலுக்குச் சென்றுள்ளனர்.இதன் போது நேற்று மாலை 4 மணியளவில் திடீரென கடும் காற்றுடன் மழை பெய்துள்ளது. இதன் போது குறித்த மீனவர்கள் சென்ற வள்ளம் கடலில் மூழ்கியது. .இதன் போது ஏனையவர்கள் தப்பிய போதும் குறித்த குடும்பஸ்தரான மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

மேலும் உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மன்னார் வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad