புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2024

கிளிநொச்சியில் ஐஸ் வியாபாரி வீட்டில் பதுங்கியிருந்த உப பொலிஸ் பரிசோதகர் கைது!

www.pungudutivuswiss.com


கிளிநொச்சியில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டினுள் இருந்த உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டினுள் இருந்த உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

கிளிநொச்சி -ஆனந்தபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் தங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிசார் அந்த வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது வீட்டில் 2700 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்தமையால் அங்கிருந்தவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் மட்டக்களப்பை சேர்ந்தவர் எனவும் ஊர்காவற்துறை பொலிஸில் பணிபுரிபவர் என்பதும் அவர் கிளிநொச்சியில் உள்ள குறித்த வீட்டிற்கு போதைப்பொருள் பயன்படுத்துவதற்காக வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இவர் உள்ளிட்ட குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போது,போதைப்பொருள் வியாபாரி தவிர்ந்த ஏனைய நால்வரும் போதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.

உப பொலிஸ் பரிசோதகர் தனது நண்பரான இந்த போதைப்பொருள் வியாபாரிக்கு வியாபாரத்தை பராமரிக்க உதவியிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் வியாபாரத்துடன் அவர் தொடர்புபட்டிருந்தது உறுதியானதையடுத்து, அவர் மீது போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் வழக்கு தொடரப்படவுள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரையும் இன்று கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்த கிளிநொச்சி பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ad

ad