புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2024

15 அமைப்புகள், 210 பேரின் சொத்துக்கள், நிதிகளை முடக்கியது அரசாங்கம்!

www.pungudutivuswiss.com


இலங்கை அரசாங்கம் 15 தீவிரவாத அமைப்புகளின் சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ண வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் 15 தீவிரவாத அமைப்புகளின் சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ண வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

15 தீவிரவாத அமைப்புகள் அந்த அமைப்புகளுடன் தொடர்புடைய 210 பேரின் சொத்துக்கள் நிதிகள் பொருளாதார வளங்களை செயல் இழக்கச் செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழர் புனர்வாழ்வு கழகம் தேசிய தவ்ஹீத் ஜாமத் உட்பட பல அமைப்புகளின் நிதிகளும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் பயங்கரவாதிகளிற்கு நிதி உதவி செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட 113 பேரின் பணத்தையும் சொத்துக்களையும் முடக்குவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ad

ad