புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2024

22ஆம் திகதி வரை வடமாகாணத்தில் கனமழைக்கு வாய்ப்பு

www.pungudutivuswiss.com

எதிர்வரும் 22ஆம் திகதி வரை வடமாகாணத்தில் கனமழையுடனான காலநிலை நிலவும் என்று வானிலையாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் மூத்த விரிவுரையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 22ஆம் திகதி வரை வடமாகாணத்தில் கனமழையுடனான காலநிலை நிலவும் என்று வானிலையாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் மூத்த விரிவுரையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இன்று முதல் தென்மேற்கு பருவக்காற்று மழையின் இரண்டாவது சுற்று ஆரம்பமாகும். இதனால் கொழும்பு, களுத்துறை, காலி, இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்கள் அடுத்து வரும் ஏழு நாள்களுக்கு கனமழை பெறும் வாய்ப்புள்ளதுடன். இம் மாவட்டங்களின் சில பிரதேசங்கள் வெள்ள இடர்களுக்கு உட்பட வாய்ப்புள்ளது.

அடுத்த வாரமளவில் மத்திய வங்காள விரிகுடாவில் காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. எனினும், அடுத்த வார முற்பகுதியிலேயே இதனை உறுதிப்படுத்த முடியும் என்றார்.

ad

ad