புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2024

சிறைக்குள் தள்ளுவேன் என ஊடகவியலாளர்களை மிரட்டிய பொலிஸ் அதிகாரி!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை சிறையில் அடைப்பேன் என சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை சிறையில் அடைப்பேன் என சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

சாவகச்சேரி நீதிமன்ற உத்தரவுக்கு அமைய வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, புதன்கிழமை காலை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்க சென்றிந்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் செய்தி அறிக்கையிட ஊடகவியாளர்கள் மற்றும் சமூக ஊடக செயற்பட்டாளர்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடினர்.

அங்கு கூடிய ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர்களை பொலிஸ் நிலையத்திற்குள் வருமாறு அழைத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த செய்தி அறிக்கையிடலில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்ததுடன் வைத்தியர் அர்ச்சுனாவிடம் எந்தவொரு நேர்காணலும் எடுக்ககூடாது எனவும் கூறியுள்ளார்.

உத்தரவை மீறி நீங்கள் செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்டால் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடினீர்கள் என்று குற்றம்சாட்டி உங்களை சிறையிலடைப்பேன் என மிரட்டியுள்ளார்.

அங்கு செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து சென்றிருந்தனர். இவ்வாறு ஊடகவியலாளர்களை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அச்சுறுத்தியமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் ஊடக அமைப்புகளிடமும் முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

ad

ad