www.pungudutivuswiss.com
பிரான்சின் தேசிய தொடருந்து சேவையான என்.என்.சி.எவ் (SNCF) மற்றும் அதிவேக தொடருந்து சேவையான ரிஜிவி (TGV) ஆகிவை இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் இயங்கவில்லை.
பாரிசில் இன்று ஒலிம்பிக்கின் தொடக்க விழா நடைபெறவுள்ள நிலையில் இச்சம்பவம் நடத்துள்ளது.
தொடருந்தின் வழித்தடத்தில் அமைந்துள்ள கேபிள்கள் எரியூட்டப்பட்டுள்ளன. கேபிள்கள் அறுக்கப்பட்டுள்ளன. சமிக்ஞை விளக்குகளின் கம்பிகள் வெட்டப்படுள்ளன.
இதனால் உள்நாடு மற்றும் வெளிநாடு அதிவேக தொடருந்து சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாரிசின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்மேற்கில் உள்ள முக்கிய நகரங்களுடன் இணைக்கும் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதானல் 800,000 பயணிகளின் பயணங்கள் தடைப்பட்டுள்ளன. தொடருந்து நிலையங்களில் பெருமளவு பயணிகள் காத்திருக்கின்றன.
இன்று 250,000 பயணிகளும், வார இறுதியில் 800,000 பயணிகளும் பாதிக்கப்படுவார்கள் என்று SNCF துணைக் கிளையின் தலைவர் கூறியுள்ளார்.
முற்பதிவு செய்த பயணிகள் தொடருந்து நிலையத்திற்கு வரவேண்டாம் என்றும் அவர்களின் பயணங்கள் மாற்றி அமைக்க முடியும் என தொடருந்து சேவையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நாசகாரச் செயலைச் செய்த குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவர் என பிரஞ்சுப் பிரதமர் ப்ரியல் அத்தால் தெரிவித்தார்.
திருத்தப்பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், திருத்தப் பணிகள் செய்து முடிக்க நீண்ட நேரம் எடுக்கலாம். ஆனால் எப்போது செய்து முடியும் என்பது உறுதியாகக் கூற முடியாது என SNCF இன் நிர்வாக இயக்குனர் ஜீன்-பியர் ஃபாரண்டூ (Jean-Pierre Farandou) தெரிவித்தார்.
பாரிஸ் வழக்குரைஞர் அலுவலகம் ஒரு குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது, நீண்ட கால சிறைவாசம் மற்றும் கணிசமான அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
யூரோஸ்டார் இப்போது புதிய தாமதங்கள் மற்றும் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் இடையேயான சேவைகளை ரத்து செய்தல் பற்றிய விவரங்களுக்கு மத்தியில் முடிந்தால் பயணத்தை ஒத்திவைக்கும்படி பயணிகளை ஊக்குவிக்கிறது.
யூரோஸ்டாரின் இணையதளத்தின்படி, லண்டன் செயின்ட் பான்கிராஸில் இருந்து பாரிஸ் கேர் டு நோர்டுக்கு இரண்டு சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
யூரோஸ்டார் உங்கள் முன்பதிவை வேறு திகதிக்க மாற்றுவது, இரத்துசெய்தல் மற்றும் மின்-வவுச்சரை பெறுவது என்று சில விருப்பங்களை பட்டியலிடுகிறது அல்லது நீங்கள் முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம்.
தற்போது லண்டன் மற்றும் பாரிஸ் இடையே பெரும்பாலான யூரோஸ்டார் ரயில்கள் இன்னும் இயங்குகின்றன - ஆனால் குறைந்தது ஒரு மணிநேரம் தாமதமாகிறது.