அத்துடன் படகோட்டிகள் மூவரும் தலா 40 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்தவேண்டும். இல்லாவிட்டால் 1 வருட கடூழிய சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அடுத்ததாக ஜூலை 23ஆம் திகதி கைதான 9 மீனவர்கள் ஏற்கனவே ஒருதடவை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், குற்றப்பத்திரிகை இரண்டாவது தடவையாகவும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்தும் இம்மாதம் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். |