பாராளுமன்றத்தில் நேற்றையதினம் நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுகாதாரத்துறை சார்ந்த சட்டமூலங்கள் , ரொனிடிமலின் அனுதாப்பிரரேரணை ஆகியவற்றை அடுத்த அமர்வில் முன்னெடுப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. முன்னதாக, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்று முன்தினம் சந்திப்பொன்று நடைபெற்றிருந்தது. இதன்போது, ஆகக்குறைந்தது மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான தடைகயை நீக்குவதற்காக முற்போக்காக செயற்பட வேண்டும் என்று சுமந்திரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் கோரியிருந்தார். அதன்போது, மாகாண சபைகளுக்கான தேர்தலை பழைய முறையில் முன்னெடுக்கும் வகையிலான திருத்தங்களை உள்ளடக்கிய தனிநபர் பிரேரணையை தான் சபையில் சமர்ப்பித்துள்ள நிலையில் அதனை நிறைவேற்றுவதன் ஊடாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான தடைகள் நீங்கும் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார். இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான இணக்கத்தினை வெளியிட்டிருந்ததோடு, கட்சித்தலைவர்கள் விடயத்தில் அவ்விடயத்தினை முன்னகர்த்துவதற்கும் நடவடிக்கைகளை எடுத்திருந்தார். இந்த நிலையில், ஆளும் கட்சியின் பிரதமகொரடா மற்றும் சபாநாயகருக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்திருத்தச்சட்டத்திiனை இம்மாதத்தின் 22ஆம் 23ஆம் திகதிகளில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு சுமந்திரன் எழுத்துமூலமான அறிவிப்பை விடுத்திருந்தார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக ஆராயந்த கட்சித்தலைவர்கள் மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச்சட்டத்தினை செம்டெம்பர் ஆறாம் திகதி இரண்டாவது வசிப்பு மீது விவாதத்தினை நடத்துவதெனவும் அன்றையதினமே வாக்கெடுப்பை நடத்துவதெனவும் தீர்மானித்தனர். குறிப்பாக, சுமந்திரனின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதத்தில் குறித்த சட்டத்தினை விவாதிக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும், ஏலவவே நிகழ்ச்சிநிரலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ள விடயங்கள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டனர். அதேநேரம், கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருக்கும் நிலையில், அங்கிருந்து சுமந்திரன் எம்.பியுடன் தொலைபேசியின் ஊடாக உரையாடியுள்ளார். சுமந்திரனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மாகாண சபைகளின் தேர்தலுக்கு தடையாக விருந்த சட்டரீதியான விடயத்தினை நீக்குவதற்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்ற விடயத்தினை பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. |