புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2024

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

www.pungudutivuswiss.com

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி தேர்தல் தினத்தன்று பிற்பகல் 04.15 மணிக்கு ஆரம்பமாகும். எண்ணும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து உரிய முடிவுகளை ஊடகங்களுக்கு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.உத்தியோகபூர்வ முடிவுகள் கிடைக்கப்பெறும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகள் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி தேர்தல் தினத்தன்று பிற்பகல் 04.15 மணிக்கு ஆரம்பமாகும். எண்ணும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து உரிய முடிவுகளை ஊடகங்களுக்கு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.உத்தியோகபூர்வ முடிவுகள் கிடைக்கப்பெறும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகள் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் தனது விருப்பு வாக்கை சரியாகக் குறிப்பிடுவது தொடர்பிலும் ரத்நாயக்க விளக்கமளிக்கையில்;

ஒரு வேட்பாளருக்கு தனது வாக்கை அளிக்கவும், அதனைத் தொடர்ந்து ஏனைய இரு வேட்பாளர்களுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்கையும் அளிக்கமுடியும்.

நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்க விரும்பினால், வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்தின் முன் பகுதியில் ‘1’ என்ற எண்ணைக் குறிக்க வேண்டும்.

அதன்பின்னர் ‘2’ மற்றும் ‘3’ என்ற எண்களைக் குறியிட்டு, தனக்கு விருப்பமான ஏனைய வேட்பாளர்களுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்கை அளிக்கலாம் .

வாக்காளர் எக்ஸ் (X) என மட்டுமே குறிப்பிட்டிருந்தால் அது வேட்பாளருக்கு அளிக்கப்பட்ட வாக்காக கருதப்படும்.

நிராகரிக்கப்படும் விருப்புத் தேர்வுகள்

01. எந்த வேட்பாளருக்கும் எந்த வாக்கும் குறிக்கப்படாதபோது

02. ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு தவறான முறையில் வாக்குகள் குறிக்கப்படும் போது;

03.ஒரு வேட்பாளருக்கு ‘1’ மற்றும் மற்றொரு வேட்பாளருக்கு ‘X’ குறிக்கப்பட்டால் அது செல்லுப்படியற்ற வாக்காக மாறும்.

04.இரண்டாவது விருப்பம் அல்லது மூன்றாவது விருப்பம் மட்டுமே குறிக்கப்படும் போதும் செல்லுப்படியற்ற வாக்காக மாறும்.

05.வாக்காளரை அடையாளப்படுத்த ஏதாவது எழுதுவது அல்லது வரைதல்

06.’2′ மற்றும் ‘3’ ஆகியவை ‘1’ தவிர வேறு ஒரு குறியுடன் முன்னுரிமையாகக் குறிக்கப்படும் போது

07.வாக்குகள் மற்றும் விருப்பத் தேர்வுகள் 1, 2, 3 க்கு மேல் குறிக்கப்படும் போது, இவ்வாறான சந்தர்ப்பங்களில் விருப்புத் தேர்வுகள் நிராகரிக்கப்படும்.

ad

ad