நாட்டின் புதிய ஜனாதிபதிக்கு இடமளிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்த தனது உடைமைகளை அகற்றியுள்ளார். அத்துடன், ஜனாதிபதி பதவிக்கு சொந்தமான அனைத்து அரச வாகனங்களையும் கையளித்துள்ளதுடன், பெஜெட் வீதியிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |