புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2024

இஸ்ரேல்-லெபனான் இடையே பயங்கர ராக்கெட் தாக்குதல்: பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடு! [Saturday 2024-09-21 07:00]

www.pungudutivuswiss.com

லெபனான் பெய்ரூட் பிராந்தியத்தின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை அரங்கேற்றியுள்ளது. செப்டம்பர் 20ம் திகதி இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையே தீவிரமான வான்வழி தாக்குதல் அரங்கேறியது, இது இருதரப்புக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து இருப்பதை காட்டுகிறது. இஸ்ரேலின் பொது ஒளிபரப்பாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில், கிட்டத்தட்ட 150 ராக்கெட்டுகள் லெபனானில் இருந்து  இஸ்ரேல் நோக்கி  வீசப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

லெபனான் பெய்ரூட் பிராந்தியத்தின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை அரங்கேற்றியுள்ளது. செப்டம்பர் 20ம் திகதி இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையே தீவிரமான வான்வழி தாக்குதல் அரங்கேறியது, இது இருதரப்புக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து இருப்பதை காட்டுகிறது. இஸ்ரேலின் பொது ஒளிபரப்பாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில், கிட்டத்தட்ட 150 ராக்கெட்டுகள் லெபனானில் இருந்து இஸ்ரேல் நோக்கி வீசப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது

லெபனானின் இந்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் விதமாக லெபனான் பெய்ரூட்(Beirut) பகுதி மீது வான்வழி தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது.

இஸ்ரேலின் இந்த தாக்குதலின் முக்கிய குறியாக, ஹிஸ்புல்லாவின் கோட்டையாக அங்கீகரிக்கப்பட கூடிய தஹியே என்ற பகுதி இருந்ததாக லெபனான் பாதுகாப்பு ஆதாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

சமீபத்தில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் தொலைதொடர்பு சாதனங்கள் வெடிப்பு சம்பவத்தில் கிட்டத்தட்ட 37 பேர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

ad

ad