________________________
புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலய கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகள் பெரும் சாதனையை படைத்துள்ளது எட்டு ஏ ஒரு எஸ் என்ற சாதனை வேம்படி மகளிர் அல்லது இந்து கல்லூரியிலோ எடுத்தவர்கள என்று நீங்கள் கேட்பீர்கள் இல்லை எமது கிராமத்தில் உள்ள பாடசாலையில் கல்வி கற்று யாழ்ப்பாணம் போன்ற நகரங்களுக்கு டியூசனுக்காக செல்லாத ஒரு சாதாரண மாணவிதான் இந்த சாதனையை படைத்திருக்கின்றார் எனது அறிவுக்கு எட்டிய வரையில் எமது கிராமத்தில் பதியப்பட்ட அது கூடிய சாதனை இதுவாகத்தான் இருக்கும் இத்தோடு இன்னும் இரண்டு மாணவர்கள்6A2BS..5A3BS என்ற நல்ல சித்தி எடுத்துள்ளார்கள் இலகு பாடங்களான தமிழ் சமயத்தில் ஏ எடுக்காத போதும் கணிதத்தில் ஐந்து மாணவர்கள் ஏ அடுத்துள்ளார்கள் இது எனது நண்பரும் சிறந்ததோர் கணித ஆசிரியருமான ராமநாதன் சுதாகரனுக்கு கிடைத்த பெருமை ஆகும் அவரது திறமைக்கும் ஓர் பாராட்டு இதற்காக உழைத்த அதிபருக்கும் ஆசிரியர் பெருந்தகைகளுக்கும் இந்தப் பாடசாலைக்கு பல்வேறு வழிகளிலும் தாராள உதவி செய்த புலம்பெயர் வாழ் எமது உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் மேலதிக விபரங்களை பற்றிய ஒரு ஆய்வுகளை உங்களுக்கு பின்னர் தருகிறேன்