புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2024

தமிழ் மக்களே சுமந்திரன் எம்பி ஆவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன இரண்டையும் மூடி விடுங்கள் _________________________

www.pungudutivuswiss.com
மாவை சேனாதிராசாவின் இரண்டு தியாகங்கள் சுமந்திரனுக்கு
முன்னே மலையாக எழுந்து நிற்கிறது தமிழரசு கட்சி என்பது
தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்களின்
இதயத்தில் ஊறிப்போன ஒரு கட்சி எமது முன்னோர் சொல்வார்கள் ஒரு கதியாலுக்கு வேட்டியை கட்டி தமிழரசு கட்சியில் கேட்க விட்டாலும் கண்ணை மூடிக்கொண்டு வீட்டுக்கு புல்லடி போட்டு வெல்ல வைப்பார்கள் மக்கள் என்று தமிழ் மக்களுக்கு சுமந்திரன் மீது பல வருடங்களாக தனிப்பட்ட முறையில் நேரடியாக வெறுப்பும் எதிர்ப்பும் உருவாகி இருப்பது உண்மை அதனால் இந்த தடவை சுமந்திரனுக்கு விருப்பு வாக்கு போதிய அளவு கிடைப்பது கஷ்டம் ஆனாலும் பழகிப்போன தமிழரசு கட்சி அபிமானிகள் ஆதரவாளர்கள் சுமந்திரன பிடிக்காவிட்டாலும் கட்சி மீதுள்ள பற்றினால் வேறு ஒரு வேட்பாளருக்கு விருப்புவாக்கையும் தமிழரசு கட்சிக்கு கட்சி வாக்கையும் குறித்து விடுவார்கள் இந்த எண்ணம் அவர்களுக்கு தெரியாமலேயே சுமந்திரனை எம் பி ஆக்க இன்னொரு வழியை திறந்து விடும் சென்ற தேர்தலில் கூட்டமைப்பாக பல கட்சிகள் சேர்ந்திருந்தன புலட் டெலோ இ பி ஆர் எல் லைப் என்று எல்லாமே ஒன்றாக இருந்தன அந்தக் கட்சிகளின் பிரபலங்களின் செல்வாக்கும் சேர்ந்திருந்தது அதனால் அந்த கட்சிகளின் மொத்த கூட்டமைப்பு என்ற பெயரில் வீட்டு சின்னத்துக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் ஒரு தேசியப் பட்டியல் எம்பி கிடைத்தது அதாவது விருப்பு வாக்கு தொகை அடிப்படையில் பின் தள்ளப்பட்டு தெரிவாகாமல் சுமந்திரன் வரும் பட்சத்திலும் மற்ற வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக கட்சிக்கு என்று நாம் அளிக்கும் வாக்கு மொத்தமாக கூட்டி அள்ளி கணக்கில் எடுக்கப்படும் அதாவது தமிழரசு கட்சியின் ஒன்பது வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க நினைக்கும் போது கட்சிக்கு என அளிக்கும் வாக்கு மொத்தமாக கணிக்கப்படும் இதன் அடிப்படையில் தேசிய நியமனப் பட்டியலில் ஒருவராவது உட் செல்ல வழி பிறக்கும் அந்த இடத்தை தனது பெயரை கொடுத்து பின் கதவால் எம்பி ஆக சுமந்திரன் முடிவெடுப்பார் இப்படி நடக்கும் என்று சுமந்திரனை வெறுத்து தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க போகிறவர்களுக்கு இப்போது உணர முடியாது இந்த விகிதாசார தேர்தல் முறை அப்படி ஒரு ஆபத்தானது கடந்த தேர்தலில் மாவை சேனாதிராசா நினைத்திருந்தால் அந்த இடத்தை எடுத்து இருக்கலாம் ஆனால் அவர் செய்த இரண்டாவது தியாகம் அம்பாறைக்கென ஒதுக்கி விட்டுக் கொடுத்து கலையரசனை பாராளுமன்றம் அனுப்பி வைத்தார் மாவை வடமாகாண சபை முதல்வராக வரக்கூடிய சந்தர்ப்பம் இருந்த போதும் கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு விக்னேஸ்வரனுக்கு அந்த இடத்தை விட்டுக் கொடுத்தார் இது இரண்டாவது தியாகம் ஆகவே தயவு செய்து தமிழ் மக்களை சுமந்திரன் ஒதுக்கப்பட வேண்டும் அவருக்கு பாடம் போட்டப்பட வேண்டும் அரசியலில் இருந்து அவரை அப்புறப்படுத்த வேண்டும் என நினைப்பீர்களானால் யாழ் கிளிநொச்சி மாவட்டத்தில் யாரும் தமிழரசு கட்சிக்கும் வாக்களிக்க வேண்டாம் அடுத்து வருகின்ற உள்ளூராட்சி தேர்தல் போன்றவற்றில் பின்னர் நடக்கும் அரசியல் இளமைகளை பார்த்து தமிழரசு கட்சியை ஆதரிப்பதா இல்லையா என்பதை நிர்வாக கட்டமைப்பு போன்றவற்றை பார்த்து பின்னர் முடிவெடுக்கலாம்

ad

ad