மேலும், பிரதமர் மிஷெல் பார்னியேரின் ஆட்சியை கவிழ்க்க குடியரசுக்கு எதிர்ப்பு முன்னணியில் ஐக்கியப்பட்டதற்காக பிரெஞ்சு தீவிர வலதுசாரிகளையும் கடும்போக்கு இடதுசாரிகளையும் அவர் கடுமையாக சாடினார். எதிர்வரும் நாட்களில் புதிய பிரதமரை நியமிப்பதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மேக்ரான், வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமையளித்து மக்கள் நலனுக்கான அரசாங்கத்தை" உருவாக்குவதற்கு அவர் முன்னுரிமை அளிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார். 2027 ஜனாதிபதி தேர்தலை குறிவைத்துள்ள National Rally கட்சி நாட்டில் குழப்பத்தை உருவாக்கி ஆதாயம் தேடப்பார்ப்பதாகவும் மேக்ரான் குற்றஞ்சாட்டியுள்ளார். |