கடந்த 29ஆம் திகதி மறைந்த மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மூன்று நாட்களாக மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை 8 மணியளவில் இறுதிக் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு 10.30 மணியளவில், அஞ்சலி உரைகள் இடம்பெற்றன. அதையடுத்து அவரது இறுதி ஊர்வலம் ஆரம்பமாகி தச்சன்காடு இந்து மயானத்தில், பிற்பகல் 2 மணியளவில் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்வில் அரசியல்வாதிகள், பொது அமைப்பினர், மத குருமார்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். |