இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாங்கள் எங்கள் உரிமைக்காக இன்று முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் மற்றும் புலனாய்வுத் துறையினர் என அனைவரும் எங்களை சுற்றி நின்று அச்சுறுத்தி கொண்டிருக்கின்றனர். அத்தோடு, புகைப்படங்களையும் அவர்கள் எடுக்க முற்படுகின்றனர், இவ்வாறு இலங்கை அரசின் அடாவடிக்கும் மற்றும் அச்சுருத்தலுக்கும் இடையில் இன்றைய போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார். |