அறிக்கையொன்றில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையில்யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் பரந்துபட்ட மனித உரிமை மீறல்களை அனுபவித்தவர்களை நினைவுகூருவதற்காக இலங்கையிலும் உலகம் எங்கிலும் உள்ள தமிழர்கள் ஒன்றுதிரள்கின்றனர். பாதிக்கப்பட்ட அனைத்து தமிழர்களையும், நினைவுகூருவதில் நான் உங்களுடன் இணைந்துகொள்கின்றேன்,அந்த அநீதிகளின் கொடுமைகளின் பாதிப்புகள் நினைவுகளுடன் வாழும் உயிர் பிழைத்தவர்கள் அன்புக்குரியவர்களுடன் உடன்நிற்கின்றோம். சமூகங்கள் ஒன்றிணைந்து முன்னோக்கி செல்வதற்கு,கடந்தகால அட்டுழியங்களை ஏற்றுக்கொள்வதும், பொறுப்புக்கூறலும் அவசியம் என்பதை நான் அறிவேன். குற்றமிழைத்தவர்களை நீதியின் முன்நிறுத்தவேண்டு;ம் என கடந்த வருடம் நான் எழுதியிருந்தேன். இதன்காரணமாக இம்முறை இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான தனிநபர்களிற்கு எதிராக நாங்கள் சமீபத்தில் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதிக்க முடிந்தமை குறித்து திருப்தியடைகின்றேன். நீதி மற்றும் அமைதியை தொடர்ந்து பின்பற்றவேண்டியதன் அவசியத்தை இந்த புனிதமான நாள் நினைவூட்டுகின்றது, நீடித்த நல்லிணக்கம் மற்றும் ஸ்திரதன்மையை அடைவதற்கு இலங்கையின் புதிய அரசாங்கத்துடனும்,இலங்கையின் வடக்குகிழக்கில் உள்ள சிவில் சமூகஅமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் இணைந்து நாங்கள் ஆக்கபூர்வமாக பணியாற்றிவருகின்றோம். |